வீடியோ : பும்ராவின் குழந்தைக்கு பாகிஸ்தான் வீரர் கொடுத்த பரிசு – நெட்டிசன்கள் பாராட்டு.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் விளையாடும் இந்த அணியே உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் அனைவரும் விரும்பமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியானது லீக் சுற்றில் மோதி கொண்டது. ஆனால் மழை காரணமாக இந்த போட்டி பாதியில் நிறுத்தபப்ட்ட நிலையில் இரண்டு அணிகளுமே தற்போது சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நிலையில் தான் இன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து சிறந்த துவக்கத்தை கொடுத்தார் ரோஹித் சர்மா. மறுபுறம் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் வேகமாக ரன்களை சேர்த்தார். இதனால் இந்த ஜோடி 17 ஓவர்கள் வரை நிலையாக நின்று பாகிஸ்தான் அணியின் பமதுவீச்சாளர்களின் பந்துகளை பறக்க விட்டனர் . மேலும் 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தது.
இதில் ரோஹித் சர்மா 49 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவவர்களில் மறுபுறம் 10 பவுண்டரியுடன் அசத்திய சுப்மன் கில் 52 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டதால் 24.1 ஓவரில் இந்தியா 147/2 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் வந்து போட்டியை நிறுத்தியது.
இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக காயத்திலிருந்து குணமடைந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா கடந்த அயர்லாந்து டி20 தொடரில் கம்பேக் கொடுத்து இந்த ஆசிய கோப்பையிலும் விளையாடி வருகிறார். அந்த நிலையில் தமது குழந்தை பிறப்பதற்காக நாடு திரும்பி அவர் நேபாளுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. இருப்பினும் தமக்கு சிங்கக்குட்டி போன்ற ஆண் குழந்தை பிறந்ததை தொடர்ந்து மீண்டும் இலங்கை திரும்பிய அவர் இந்த போட்டியில் ஷமிக்கு பதிலாக இடம் பிடித்து விளையாடினார்.
Spreading joy 🙌
— Pakistan Cricket (@TheRealPCB) September 10, 2023
Shaheen Afridi delivers smiles to new dad Jasprit Bumrah 👶🏼🎁#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/Nx04tdegjX
ஆனால் மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் போட்டியின் முடிவில் அவரை சந்தித்த பாகிஸ்தான் நட்சத்திர வீரர் சாகின் அப்ரிடி தந்தையானதிற்காக சிறப்பு பரிசு வழங்கினார். குறிப்பாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் சார்பில் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஷாஹீன் அப்ரிடி கூறினார். மேலும் உங்கள் குழந்தை அடுத்த பும்ராவாக வர வேண்டுமென அவர் வாழ்த்தியதற்கு சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்ட பும்ரா பரிசையும் வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்தார்.