கேப்டன் பதவி ஒன்றும் ரோஜா படுக்கை கிடையாது – பாபர் அசாம் மீது ஷாகித் அப்ரிடி தாக்கு.
இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியானது அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் அவர்களின் பீல்டிங் தான். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும் பௌலிங் மற்றும் பீல்டிங் என்று வரும் போது பாகிஸ்தான் சொதப்பி வருகிறது இதனால் பல ம
இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியானது அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் அவர்களின் பீல்டிங் தான். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினாலும் பௌலிங் மற்றும் பீல்டிங் என்று வரும் போது பாகிஸ்தான் சொதப்பி வருகிறது இதனால் பல முன்னாள் வீரர்களே கேப்டன் பாபர் அசாமையும் பாகிஸ்தான் அணியையும் விமர்சிக்கும் நிலையில் தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.
அவர் பேசுகையில் “உங்கள் தேசிய அணிக்கு கேப்டனாக இருப்பது மரியாதைக்குரிய விஷயம் ஆனால் அது ரோஜாக்களின் படுக்கையாக இருக்கும் என்று கிடையாது. உங்களுடைய அணிக்காக நீங்கள் நல்லது செய்யும் போது, எல்லாரும் உங்களைப் புகழ்வார்கள். நீங்கள் அப்படி செய்யாமல் கொம்ஜாம் சொதப்பும் போது உங்களையும் உங்களுடைய அணியின் தலைமைப் பயிற்சியாளரையும் குற்றம் சாட்டுகிறார்கள்.
அழுத்தம் கொடுப்பது கேப்டனின் வேலை, ஒரு வேகப்பந்து வீச்சாளர் பந்துவீசுகிறார், அதன் போது ஒரு ஸ்லிப் இல்லை? 12 பந்துகளில் நான்கு ரன்கள் தேவை என்ற போது பாய்ண்ட் திசையில் இருந்தவர் பேக்வார்ட் பாய்ண்டிற்கு செக்கிறார். இப்படி அழுத்தத்தைப் பயன்படுத்த பாபர் அசாம் எதுவும் செய்யவில்லை. இதே ஆஸ்திரேலியர்கள் ஒன்று முதல் இரண்டு விக்கெட்டுகள் எடுத்த பிறகு உள்வட்டத்திற்குள் வீரர்களை கொண்டுவடந்து அழுத்தத்தை கொடுத்தனர். ஆனால் பாபர் அப்படி செய்யவில்லை
நீங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தாத போது பீல்டிங் சிக்கல்கள் நடக்கும். சில நேரங்களில் நாம் அற்புதங்கள், அற்புதங்களுக்காக காத்திருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். அது மட்டும் நடக்காது. சண்டையிடத் தெரிந்த துணிச்சலான வீரர்களிடம் தான் அது நடக்கிறது.
போட்டியில் அணியை தலைமை தாங்கும் ஒரு கேப்டன் தான் எல்லாமே. ஒரு கேப்டன் தனது சிறந்ததைக் கொடுத்தால், களத்தின் போது டைவ் செய்தால், மற்ற வீரர்களுக்கு ஓவர்களுக்கு இடையிடையே ஆதரவு கொடுத்தால், ஒட்டுமொத்த அணியும் சுறுசுறுப்பாக இருக்கும். ஏனென்றால் கேப்டன் தனது அனைத்தையும் கொடுப்பதை பார்க்கும்போது சக வீரர்கள் தங்களால் அது முடியவில்லையே என்று வெட்கப்படுகிறார்கள். நாம் ஏன் அப்படி இருக்க முடியாது? என்றார்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “இது கடந்த காலங்களில் நடந்தது, நான் கேப்டனாக இருந்தபோது அல்லது முகமது யூசுப் இருந்தபோது, நாங்கள் சிறப்பாக செயல்பட்ட போது ஒட்டுமொத்த அணியிம் சிறப்பாக செயல்பட்டது என்று தற்போது உள்ள பாகிஸ்தான் அணியை விமர்சித்து பேசியுள்ளார் அப்ரிடி.