“ஆக்ரோஷம் ஓகே தான், ஆனால் இது ஓவர்” இந்திய மகளீர் அணியின் கேப்டனை விமர்சித்த ஷாஹித் அப்ரிடி

இந்திய மகளீர் கிரிக்கெட் அணியானது வங்காளதேசத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்திய அணியானது விளையாடியது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று 2 -1 என்ற கணக்கில் வங்காள தேசத்

By ·

இந்திய மகளீர் கிரிக்கெட் அணியானது வங்காளதேசத்திக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளை இந்திய அணியானது விளையாடியது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று 2 -1 என்ற கணக்கில் வங்காள தேசத்தை வீழ்த்தியது. இதனையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடந்தது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் வங்காள அணியும், இரண்டவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றவது போட்டியானது டிராவானது. இந்நிலையில் இந்த போட்டியின்போது இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடிய கொண்டிருக்க அவர் LBW காரணமாக ஆட்டமிழந்தார். ஆனால் அம்பயரின் இந்த முடிவால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் சஸ்டெம்புகளை பேட்டினால் தாக்கினர்.

இதனால் இது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயை பரவியது. மேலும் இந்தியா கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருவுக்கு 75 சதவிகிதம் போட்டி தொகையில் இருந்து தண்டனையாக பிடிக்கப்பட்டு இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடையும் விதிக்கப்ட்டுள்ளது. மேலும் பல முன்னாள் வீரர்களும், ஜாம்பவங்களும், பங்களாதேஷ் அணியின் கேப்டனும் இவர் செய்தது மிகவும் தவறான ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சித்தனர்.

ஷாஹித் அப்ரிடி பேச்சு :

இப்படிப்பட்ட நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இவரை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது ” இது இந்தியாவைப் பற்றியது மட்டுமல்ல, கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்கள் கிரிக்கெட்டில் இது அசாதாரணமானது என்றாலும், இந்த சம்பவம் மிகவும் அதிகமாக இருந்தது. குறிப்பாக ஐசிசி போன்ற பெரிய போட்டியில் இது நடந்துள்ளது.

எனவே எதிர்காலத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் வகையில் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்ட வேண்டும் என்றார் அவர். மேலும் பேசிய அவர் கூறுகையில் கிரிக்கெட்டில் ஆக்ரோஷம் ஏற்றுக்கொள்ளத்தக்கது தான் ஆனால் இது எல்லை மீறியது என்றார் ஷாஹித் அப்ரிடி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை