இந்த விஷயத்தில் நடராஜன் தரமான பௌலர்.. அவருக்கு இடமில்லையா? – ஷேன் வாட்சன் பதிவு.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இந்த தொடருக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் டி20 மாயாஜாலமானது உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பலருக்கு இந
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இந்த தொடருக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் டி20 மாயாஜாலமானது உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பலருக்கு இந்த தேர்வு உலக கோப்பையை வெல்ல சரியாக இருக்கும் என்றும், சிலருக்கு இந்த தேர்வு சரியாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பிடதக்க வகையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஸ்பின்னர்களுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்த வகையில் இந்த முறையும் அதிக ஸ்பின்னர்கள் அணியில் இறுகின்றனர். இருந்த போதிலும் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை.
சொல்லப்போனால் இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நடராஜன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறார். மேலும் ஹைதராபாத் அணியின் முக்கிய பந்துவீச்சாளராகவும், பாட் கம்மின்ஸ்ன் விருப்பமான வீரராகவும் இருந்து வருகிறார் நடராஜன்.
இருந்த போதிலும் நடராஜனுக்கு வர இருக்கின்ற உலக கோப்பை டி20 தொடரில் வாய்ப்பு என்பது கிடைக்காதது பலருக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான் முன்னாள் சென்னை அணியின் வீரரும் முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரருமான ஷேன் வாட்சன் உலக கோப்பையில் நடராஜன் இடம்பெறாதது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் :யார்க்கரை வீசுவதில் அவருக்கு அதிக திறமை இருக்கிறது. அவர் பந்து வீச வேண்டிய நேரத்தில் அவரது வேக மாறுபாடுகள் இருப்பது மட்டுமல்லாமல் அவர் மீண்டும் மீண்டும் அதனை செய்கிறார். அதனால் தான் அவர் இந்திய டி20 அணியில் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் நிலையாக நிற்கும் போது வந்து பந்து வீசும் அவர் இந்தியா மட்டுமல்ல உலக கிரிக்கெட்டில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றார் ஷேன் வாட்சன்.
டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :
ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்