தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன்.
தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையான சீசனாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் 2 போட்டி வெற்றி 2 போட்டியில் தோல்வி என்று கலவையான நிலையில் உள்ளது. அதே போன்று சென்னையின் பல வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருக்கின்றனர். அதே போன்று கேப்டன் தோனியும
தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனையான சீசனாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் 2 போட்டி வெற்றி 2 போட்டியில் தோல்வி என்று கலவையான நிலையில் உள்ளது. அதே போன்று சென்னையின் பல வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருக்கின்றனர். அதே போன்று கேப்டன் தோனியும் முழங்காலில் காயம் ஏற்படுத்தினால் வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்றே சந்தேகமாக இருக்கிறது.
மேலும் இது போதாதென்று இந்த சீசன் தான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தோனி குறித்து பிரபல ஆஸ்திரேலிய வீரரும், ஐபிஎல் வீரருமான ஷேன் வாட்சன் கூறும்போது இது எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் என்று நான் கேள்விப்பட்டேன், ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. எம்எஸ் தோனி அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு விளையாடலாம்.
அவர் இன்னும் மிகவும் உடற்தகுதியுடன் இருக்கிறார், தோனியுடைய பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் மிகவும் சிறப்பாக உள்ளது.அவரது கேப்டன் அவருடைய அற்புதமான பேட்டிங் போன்றது. அவரது உடற்தகுதி மற்றும் விளையாட்டைப் புரிந்துகொள்ளும் திறன் அவரை ஒரு நல்ல தலைவராக்குகிறது. மைதானத்தில் அவரது திறமைகள் பிரமிக்க வைக்கின்றன. சிஎஸ்கே வெற்றி பெற அவர் ஒரு முக்கிய காரணம் என்றால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஷேன் வாட்சன்.
மேலும் பேசிய ஷேன் வாட்சன் கூறுகையில் நான் “ஆஸ்திரேலியாவில் வளர்ந்ததால், விளையாட்டை விரைவாக முடிக்க எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கற்றுக்கொண்டோம். உங்களால் முடிந்தால் அதை விடாதீர்கள். கடைசி ஓவர் வரை அதனை செய்யிங்கள் என்று நினைப்போம்.
அதேசமயம் MSD கூறும்போது கடைசி ஓவர் வரை நான் அதை எடுத்துக்கொள்வேன், ஏனெனில் இதன் போது பந்துவீச்சாளர் மீது அதிக அழுத்தம் இருக்கும், எனவே அது இறுதிவரை நெருங்க நெருங்க, பந்துவீச்சாளர் தவறு செய்ய வாய்ப்புகள் அதிகம் இதனை தொடர்ந்து தோனி செய்து வருகிறது, ஆனால் இது ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் நாங்கள் கற்பித்ததை விட வித்தியாசமான அணுகுமுறையாகும் என்றார் ஷேன் வாட்ஸன்