ரோஹித் ஷர்மாவின் சமீபத்திய பேட்டிங் குறித்து விமர்சித்த ஷேன் வாட்சன்.
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போது மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக்கின் தற்போதைய சீசனில், அவர் பேட்டிங் செய்ய போராடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா ஐபிஎல் 2023 இல் இதுவரை ஒரு அரை சதம் மட்டுமே அடித்து திணறியே வருகிறார். ரோஹித்தின்
இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போது மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக்கின் தற்போதைய சீசனில், அவர் பேட்டிங் செய்ய போராடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா ஐபிஎல் 2023 இல் இதுவரை ஒரு அரை சதம் மட்டுமே அடித்து திணறியே வருகிறார். ரோஹித்தின் சமீபத்திய மோசமான ஆட்டத்தை குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
புள்ளிப்பட்டியலில் ரோஹித்தின் மும்பை இந்தியன்ஸ் அணி எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது ஐந்து முறை சாம்பியனான இந்த சீசனில் முதல் ஏழு போட்டிகளில் நான்கில் தோல்வியடைந்து பரிதாபத்தில் உள்ளது. ரோஹித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், மும்பை இந்தியன்ஸ் கேப்டனின் செயல்பாடுகள் பல சீசன்களில் சிறப்பு எதுவும் இல்லை என்றும் கூறினார்.
ரோஹித் சர்மாவைப் பற்றி ஷேன் வாட்சன் பேசுகையில்,
“மன ஆற்றலைக் கட்டுப்படுத்துவது ஒரு வீரருக்கு பெரிய சவால். உலகெங்கிலும் உள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நிறைய கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆண்டு முழுவதும் இடைவெளி இல்லாமல் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். தற்போது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றுள்ளதால், அவருக்கு அதிக பொறுப்புகள் உள்ளன. அவர் மனதளவில் கொஞ்சம் சோர்வாக இருந்து வருகிறார்,
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் வாட்சன் , ரோஹித் ஷர்மா சில சீசன்களாக மும்பை அணிக்காக பேட்டிங் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும் கூறினார். ஷேன் வாட்சன் மேலும் கூறுகையில், “ரோஹித் ஷர்மாவின் சிறந்த ஆட்டத்தை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் கடந்த நான்கு ஐந்து வருட ஐபிஎல்லில் அவர் பேட்டிங்கில் மிகவும் தடுமாறியே வருகிறார் . அவர் உச்சத்தில் இருக்கும் போது உலகின் அனைத்து சிறந்த பந்து வீச்சாளர்களுக்கும் எதிராக வெற்றி பெற்று இருந்து வந்தார், அந்த சூழ்நிலைகளில் பந்து வீச்சாளர்களுக்கு அவர் சவாலாகவே இருந்து வந்தார் . ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் ஒரு வருடம் கூட ஐபிஎல்லில் அவர் தன்னுடைய பொறுப்பிற்கு ஏற்றார் போல் விளையாட வில்லை, என்றும் வாட்சன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.