விராட் கோலிக்குள் கம்ப்யூட்டர் இருக்கு.. கடினமான வேலையை எளிதாக காட்டுகிறார் – ஷேன் வாட்சன் புகழாரம்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணிகள் இன்று தர்மசாலாவில் மோதின. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காய
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி மற்றும் இந்தியா அணிகள் இன்று தர்மசாலாவில் மோதின. இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடுவதால் அவருக்கு பதிலாக சூரியகுமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் இதுவே அவரது முதல் உலககோப்பை போட்டியாகும்
இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு 274 ரன்களை இலக்காகக் நிர்ணயித்தது நியூசிலாந்து அணி. பின்னர் இதனை துரத்திய இந்திய அணிக்கு உடனடியாக சில விக்கெட்டுகள் விழுக கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இருந்தது. ஆனால் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி காரணமாக இந்திய 48 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
இந்த உலக கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கப்டும் விராட் கோலி அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்கம் முதலே மாஸ் காட்டும் அவர் இந்த தொடரில் ஒரு சதம் உள்பட 4 அரை சதங்களை எடுத்துள்ளார் மேலும் 5 போட்டிகளால் விளையாடியுள்ள அவர் 354 ரன்களை விளாசி முதன்மை இடத்தில் தற்போது உள்ளார். ஆனால் நேற்று நடந்த போட்டியில் சதம் அடிக்கும் நேரத்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் விராட் கோலி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “விராட் கோலி தனக்குள்ளே ஒரு கணினியைப் கொண்டுள்ளார். அது மிகவும் திறமையாக வேலை செய்கிறது, சரியான நேரத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இது சாதாரணமாக மைதானத்திற்குள் இறங்கி விளையாடுவது போல இல்லை. ஏனென்றால் இந்த தொடரில் தோற்கடிக்க படாத ஒரு அணிக்கு எதிராக ரன்களை அடிக்க வேண்டும். அவருக்குள் இருக்கும் கம்ப்யூட்டர் அவரை சரியாக இயக்குகிறது என்று கூறினார் ஷேன் வாட்சன்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “ரன்களைத் துரத்துவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், ஆனால் கோலி அதை மிகவும் எளிதாக்குகிறார். அவர் இவ்வளவு காலமாக அதைச் செய்துள்ளார், அவர் அதை மிகவும் எளிதாக்கினார். இது சவாலானது, ஏனென்றால் நீங்கள் யார் என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எந்தெந்த பந்துகளை அடிக்க வேண்டும், எந்தெந்த பந்துகளில் விடவேண்டும் என்று நன்றாக தெரிய வேண்டும் என்றார் வாட்சன்.