எப்படிப்பட்ட பிளேயர் அவரு..அவர போய் விட்டுட்டீங்களே ஆர்சிபி – வருத்தம் தெரிவித்த வாட்சன்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 14வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலபரீட்சை செய்தது. இதில் ட
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 14வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலபரீட்சை செய்தது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
முதலாவதாக களமிறங்கிய மும்பை 20 ஒவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த பந்துவீச்சாளரான போல்ட் என்றாலும் யுஸ்வேந்திர சாஹல் தான் ரன்களை கொடுக்காமல் மும்பை அணியின் முக்கிய வீரர்களை அவுட் செய்தார். இது மும்பை அணிக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்நிலையில் தான் சேமிப்பதில் ராஜஸ்தான் அணியில் இணைத்து கலக்கிக்கொண்டிருக்கும் சாஹல் குறித்து பேசியுள்ளார் வாட்சன்.
அவர் கூறுகையில் ”யுஸ்வேந்திர சாஹல் சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் நீண்ட காலமாக சாதனை படைத்துள்ளார். சாஹல் அதிக ரன்களை எதிரணிக்கு கொடுக்கவில்லை. மேலும் அவர் எதிரணியின் சிறந்த பேட்டர்களை வெளியேற்றினார். அவர் ஒவ்வொரு ஆண்டும் போட்டிக்கு பிறகு போட்டி என அப்படியே செய்து வருகிறது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அவரைப் பெற்றிருப்பது மிகவும் அதிர்ஷ்டம் என்றார் வாட்சன்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “யுஸ்வேந்திர சாஹல் இன்று நடந்த ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் இருந்த ஹர்திக் பாண்டியாவின் பெரிய விக்கெட்டை எடுத்தார். அதுமட்டுமல்லாமல் சாஹல் மீண்டும் முதலிடத்தில் வந்தார். இதை நான் தொடர்ந்து சொல்கிறேன் RCB நீங்கள் ஏன் அவரை விடுவித்தீர்கள் என்று வருத்தம் தெரிவித்தார் வாட்சன்.
குறிப்பிடத்தக்க வகையில் யுஸ்வேந்திர சாஹலை விடுவித்த ஆர்சிபி மீண்டும் அவரை 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் திரும்ப பெறுவதாக கூறியது. ஆனால் அவர்கள் மீண்டும் யுஸ்வேந்திர சாஹலை எடுக்கவில்லை.இந்நிலையில் யுஸ்வேந்திர சாஹல் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுகையில் “நான் என் பெயரை ஐபிஎல் ஏலத்திற்கு வைத்தபோது, அவர்கள் எனக்காக எல்லாவற்றையும் செய்வார்கள் என்று அவர்கள் என்னிடம் உறுதியளித்தனர்.
நான் சரி என்று சொன்னேன். ஆனால் என்னை அவர்கள் ஏலத்தில் எடுக்காததால் நான் மிகவும் கோபமாக இருந்தேன். நான் ஆர்.சி.பி.க்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எனது முதல் போட்டியில் விளையாடியபோதும். நான் யாரிடமும் பேசவில்லை. நான் பயிற்சியாளரிடமே 2 அல்லது 3 நாட்கள் கழித்து தான் பேசினேன் என்று தன்னை ஆர்சிபி மீண்டும் எடுக்காதது குறித்து பேசியிருந்தார் சாஹல்.