விளையாட்டை ஆழமாக எடுத்து செல்ல சொன்னார்.. தோனியின் அறிவுரையை நினைவுகூர்ந்த ஷஷாங்க் சிங்.
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில்
உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்றைய 18-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது.சென்னை அணி இதற்க்கு முன்பு நடந்த 3 போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று கடந்த டெல்லி அணிக்கான போட்டியில் தோல்வியை தழுவிய இந்த போட்டியில் விளையாடியது.
அதேபோல் ஹைதராபாத் 3 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றும் இருந்தது.சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இச்சின் மற்றும் ருதுராஜ் அதிக அளவில் ரன்களை குவிக்காமல் சொற்ப ரன்களில் வெளியேற சென்னை அணி மிகவும் பதற்றமான நிலையில் சென்றது. அதன் பின்பு மிடில் ஓவரில் வந்த சிவம் துபே அவரது அதிரடி திறமையை அடித்துக்காட்டிருந்தார். அதன் மூலம் தான் சென்னை அணிக்கு ஓர் அளவாவது ரன்களை எட்ட முடிந்தது என்றும் கூறலாம். அதன் பின்பு அந்த எந்த வீரர்களும் ரன்களை அடித்து குவிக்காததால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 165 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
அதன் பின்பு பேட்டிங் செய்ய வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதலே அவர்களது அதிரடியை காட்ட தொடங்கினர். ஹைதராபாத் அணி சென்னை அணியின் ரன்களை 18.2 ஓவர்களிலே எட்டி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த முடிந்து ஷஷாங்க் சிங் பேசுகையில் தோனி தனக்கு கொடுக்க அறிவுரை குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறியதாவது : நான் எம்எஸ் தோனி அவர்களிடம் பேசும்போதெல்லாம் அவர் எப்போதும் விளையாட்டை முடிந்தவரை ஆழமாக எடுக்கச் சொன்னார். நீங்கள் விளையாட்டை ஆழமாக எடுத்துக் கொள்ளும்போது பந்துவீச்சாளர் மீது அழுத்தம் இருக்கும் என்று அவர் கூறினார். இது தங்களுடைய உணர்ச்சிகளை முடிந்தவரை நிதானமாக இருக்க வேண்டும் என்பது. நான் என்னை அமைதியாக இருக்கவும் பந்துக்கு எதிர்வினையாற்றவும் ஆழ்ந்த சுவாசம் செய்து கொண்டிருந்தேன்.
சில சமயங்களில் நீங்கள் அதிக புத்திசாலியாக இருப்பீர்கள் மற்றும் மோசமான ஷாட்களை விளையாடுவீர்கள், ஆனால் நான் பந்திற்கு எதிர்வினையாற்றவே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அசுதோஷ் சர்மாவுடன் பேசிக்கொண்டிருந்தேன் நடுவில் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.
கடைசி வரை இருந்தால் போட்டியில் வெற்றி பெறுவோம் என்று அவரிடம் கூறினேன். நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வில்லிடினோம். ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்திருந்தோம். நான்கு அல்லது ஐந்து ஓவர்களில் 50-60 ரன்கள் எடுக்கும் அதே நோக்கத்துடன் நாங்கள் பயிற்சி செய்தோம். இதற்கு இதே போன்று நாங்கள் பயிற்சி ஆட்டங்களில் செய்துள்ளோம், நாங்கள் ஒருவரையொருவர் நம்பினோம் என்றார் ஷஷாங்க்.