கில்லும், ஷாவும் உலக கோப்பை U19ல் ஒரே அணி தான், ஆனால் இப்போது எப்படி இருக்கிறார்கள் – ஷாவை விளாசும் கில்லின் முன்னாள் பயிற்சியாளர்.

ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் குஜராத் அணியின் சுப்மன

By ·

ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில் சில இளம் வீரர்கள் மோசமான வார்த்தைகளிலும் பெறுகின்றனர். அந்த வகையில் சொல்ல வேண்டும் என்றால் பிரதிவ் ஷாவை கூறலாம். ஏனென்றால் தற்போது கலக்கி வரும் குஜராத் அணியின் சுப்மன் கில் மற்றும் பிரதிவ் ஷா இருவரும் U19 ஒரே அணியில் தான் இருந்தார்கள்.

U19 உலகக்கோப்பையில் நிசிலாந்து அணியை வீழ்த்திய பிறகு ஆஸ்திரேலியாவை பைனலில் வீழ்த்தியது அந்த அணி. மேலும் அந்த அணிக்கு பிரதிவ் ஸார் கேப்டனாகவும், கில் மேன் ஆஃப் தி டோர்னமெண்ட்டாகவும் இருந்தார். இதனால் இருவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றார் கூறப்பட்டது. அதே போன்று ஷா இந்திய அணியில் 2018ஆம் ஆண்டு இணைந்தார். இவருடைய பேட்டிங்கை பார்த்து அடுத்த சச்சின் டெண்டுல்கர் இவர் தான் என்று பலர் கூறினார்.

ஆனால் வெஸ்ட் இன்டிங்ஸ்க்கு எதிரான போட்டிக்கு பிறகு அவருடைய கிரிக்கெட் வாழ்ககை தலைகீழாக மாறி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் மறுபுறம் கில் 2019 ஆம் ஆண்டில் இந்திய அணியில் இணைத்து தற்போது எல்லா கிரிக்கெட் தொடர்களிலும் சிறந்த கிரிக்கேட் வீரராக திகழ்கிறார். மேலும் இந்த ஐபிஎல் போட்டியில் கில் மூன்று சதங்களுடன் 851 ரன்கள் எடுத்திருக்க ஷா மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 போட்டிகளில் 54 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.

கர்சன் காவ்ரி கூறியது :

அப்படி பட்ட நிலையில் தான் பிரதிவ் ஷா குறித்து முன்னாள் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் கர்சன் காவ்ரி அதிர்ச்சி தரும் கருத்தை கூறியுள்ளார் அவர் கூறுகையில் “உலகக்கோப்பையை வென்ற U19 அணியில் தான் சுப்,மன் கில்லும் பிரதிவ் ஷாவும் இருந்தார்கள். ஆனால் தற்போது பிரதிவ் ஷா எங்கே இருக்கிறார், சுப்மன் கில் எங்கே இருக்கிறார். அவர்கள் இருவரு தற்போது முற்றிலும் வேறு வகையாக மாறிவிட்டனர். தொடர்ந்து உழைக்க வேண்டும் அப்போதுதான் கிரிக்கெட் மைத்தானத்தின் கிரீஸை உங்களினால் ஆக்கிரமிக்க முடியும். அதனை செய்தால், நீங்கள் அதிக ரன்கள் எடுப்பீர்கள் ஏற்றார்.

மேலும் பேசிய அவர் “அவர்கள் இருவரும் ஒரே வயதுடைய வீரர்கள் தான். இப்போது கூட எதுவும் போகவில்லை. கில் தன்னுடைய கிரிக்கெட்டில் பல மாற்றங்களை செய்து முன்னேறிய வருகிறார். ஆனால் ஷா அதை செய்யவில்லை. அவரால் முடியும், அதற்காக அவர் கடுமையாக உழைக்க வேண்டும், இல்லையென்றால் கிரிக்கெட்டில் விளையாடும் திறமை இருந்து அது உபயோகம் இல்லாததுதான்.

பிரதிவ் ஷா தன்னை ஒரு சூப்பர்ஸ்டார் என்றும் தன்னிடம் யாராலும் நெருங்க முடியாது என்று நினைக்கிறார். ஆனால் அவர் சர்வதேச தரத்தில் அதை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். டி20, டெஸ்ட், ஒருநாள் , ரஞ்சி ட்ராபி என எந்த போட்டியாக இருந்தாலும் சரி உங்களை ஆட்டமிழக்க செய்ய ஒரு பந்து போதும். நீங்கள் ஒழுக்கத்தையும் நல்ல குணத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் முன்னாள் இந்திய அணியின் வீரர் கர்சன் காவ்ரி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை