இந்தியாவிற்கு இது நடக்காமல் கூட போகலாம் – ஷிகர் தவான் அதிர்ச்சி கருத்து.
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசிய கட்டத்தை எட்டியுள்ளது. அணைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் வருவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருட்னஹா போதிலும் பல அணிகள் ஏற்கனவே 5 போட்டிகளை ஆடியுள்ள நிலையில் கிட்டத்தட்ட சில அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லவும் வாய்ப
உலக கோப்பை 2023 தொடரானது தற்போது சுவாரசிய கட்டத்தை எட்டியுள்ளது. அணைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் வருவதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். இருட்னஹா போதிலும் பல அணிகள் ஏற்கனவே 5 போட்டிகளை ஆடியுள்ள நிலையில் கிட்டத்தட்ட சில அணிகள் அரையிறுதி போட்டிக்கு செல்லவும் வாய்ப்பை பெற்றுவிட்டனர். அதில் இந்திய அணி ஏற்கனவே நடந்த 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.
மேலும் அதற்கு அடுத்த படியாக பலமான அணிகளாக தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் இறுகின்றனர். மேலும் தொடந்து சில தோல்விகளை தழுவிய பாகிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லாந்து, இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகள் கொஞ்சம் மோசமான கட்டத்தில் இறுகின்றனர். இதனால் வரும் போட்டிகளை அவர்கள் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருகின்றனர்.
இருந்த போதிலும் யார் யாரை வீழ்த்துவார்கள் என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. ஏனென்றால் நடப்பு சாம்பியன் இங்கிலந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்த, அதே அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. அதே போல பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது இப்ப்டி இந்த தொடரில் அதிர்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் கூறவேண்டும்.
மேலும் வெற்றி பெறுவது ஒருபக்கம் இருந்தாலும் ரன் ரேட் பெரிய பங்கை இந்த போட்டியில் ஆற்றுகிறது. அதாவது ஒரு அணிகள் 5 போட்களில் வெற்றி பெற்றிருந்தாலும் நெட் ரன் ரேட்டை பொறுத்தே புள்ளி பட்டியலில் இடங்கள் வழங்கப்படும் என்பதினால், அதற்கு பல அணிகள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே கடைசி நேரத்தில் கூட எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதினால் அனைத்து அணிகளுமே எச்சரிக்கையுடன் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் வீரர் ஷிகர் தவான் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் போட்டிருந்த பதிவில் ” இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்த போதிலும் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியும் புள்ளி பட்டியலை மாற்றியமைக்கிறது.
தற்போது 4வது இடத்திற்கு ரன் ரேட்டிற்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது, இன்னமும் நிறைய போட்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒன்று செமி ஃபைனலுக்கு தகுதி பெறாமல் போனால் ஆச்சரியமாக இருக்கலாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ரசிகர்களே? என்று கேள்வியெழுப்பி பதிவிட்டிருந்தார் ஷிகர் தவான்.