சொல்வதை கேட்டால் தானே… அணி வீரர்கள் மீது அதிருப்தி தெரிவித்த ஷிக்கர் தவான்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செ
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்ய அது சரியான முடிவாக சென்றது. லக்னோ அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஓவர்களில் கொஞ்சம் நிதானமாக ஆடினாலும் 3வது ஓவரில் இருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.
இருந்த போதிலும் ராகுல் 9 பந்துகளில் 1 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் நிலைக்காமல் ஆட்டமிழந்தனர். டீ காக் மட்மே பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்த போதிலும் அவரும் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய பூராண் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குணால் பாண்டியா அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்த இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை அடித்தது.
பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் அற்புதமாக இருந்தது. இதனை பார்த்த பலரும் பஞ்சாப் இன்று வெற்றியடையும் என்று நினைத்த போது பேர்ஸ்டோவின் விக்கெட் விழுந்தது. அது போட்டியின் திருப்புமுனையாக இருந்தது.பின்னர் வந்த பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பஞ்சாப். இந்த போட்டியில் மயங்க் யாதவ் சிறப்பாக விளையாடி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிக்கர் தவான் கூறுகையில் – அவர்கள் நன்றாக விளையாடினார்கள், பரிதாபமாக லிவிங்ஸ்டோன் காயமடைந்தார் அது எங்களை காயப்படுத்தியது. அவர் 4 வது வீரராக களமிறங்கி இருப்பார். எங்களுடைய தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் மயங்க் தனது வேகத்தில் சிறப்பாக பந்து வீசினார். அவரை எதிர்கொள்வது நன்றாக இருந்தது. அவரது பந்துவீச்சும் வேகத்தில் நான் ஆச்சரியப்பட்டேன், ஆனால் நான் அவருக்கு எதிராக அவரது வேகத்தைப் பயன்படுத்த விரும்பினேன். ஆனால் அவர் பவுன்சர்கள் மற்றும் யார்க்கர்களை நன்றாக வீசினார்
நான் மிகவும் கவனமாக இருந்தேன். எங்களுடைய அணியின் பேட்டர்களை ஷார்ட் சைடைப் பயன்படுத்தவும், அவரது வேகத்தைப் பயன்படுத்தவும் கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் தனது உடலுக்கு நேராக பந்து வீசினார். அதே போலத்தான் பேர்ஸ்டோவையும் ஆட்டமிழக்க செய்தார். இதையே தான் நான் ஜிதேஷிடமும் சொன்னேன்.
ஆனால் மொஹ்சின் நன்றாக பந்துவீசினார். அவர் நல்ல நீளத்தில் பந்துவீச்சி எங்களது பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இந்த தோல்விகளை நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும். டிராப் கேட்ச் எங்களுக்கு சில வேகத்தை கொடுத்தது. இது நாம் முன்னோக்கி மேம்படுத்த வேண்டிய ஒன்று என்றார் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிக்கர் தவான்.