போட்ட கணக்கு தவறாகிவிட்டது – பஞ்சாப் தோல்விக்கு பிறகு வருத்தம் தெரிவித்த ஷிகர் தவான்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வென்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான அற்புதமான ஆட்டத்தில் இரு த
இந்தியன் பிரீமியர் லீக்கில் லீக்கின் 38வது ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வென்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான அற்புதமான ஆட்டத்தில் இரு தரப்பிலிருந்தும் அனல் பறக்கும் இன்னிங்ஸ் மற்றும் அற்புதமான சிக்ஸர்கள் ரசிகர்களுக்கு விருத்தளித்தது.
முதலில் லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க கே.எல். ராகுல் 12 ரன்களில் வெளியேறினார், இருப்பினும் மற்றொரு பக்கம் மேயர்ஸ் அதிரடி பாணியை விடாமல் விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்ய, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 9 வது ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 111 குவித்து இருந்தனர். பதோனி 24 பந்துகளில் 43 ரன்களை குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற
அதன் பின் பூரான் இருவரும் இணைத்து அதிரடி காட்ட ஸ்டானிஸ் 72 ரன்களை குவித்து வெளியேற, அதன் பின் பூரான் 45 ரன்களை குவித்த நிலையில் வெளியேறினார், இறுதியில் 20 ஓவர்கள் முடியில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது லக்னோ 258 என்ற இமாலய இலக்குடன் களம் கண்ட பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே சோதனையாக அமைய ஒரு புறம் நிதானமாக விளையாடிய அதர்வா 66 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்த வெளியேற பஞ்சாப் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 201 ரன்களை மட்டுமே அடித்தது தோல்வியை தழுவியது.
நாங்கள் அதிக ரன்களை தொடக்கத்திலேயே விட்டு கொடுத்து விட்டோம். அதுவே எங்களுடைய தோல்விக்கான முதன்மை காரணம். அதே போல நாங்கள் பேட்டிங் செய்ய வந்த போது பந்து பேட்டிற்க்கு சரியாக விரைவாக வரவில்லை என்று நான் உணர்ந்தேன். அதனால் நான் அடித்த பந்து நேரடியாக பீல்டரிடம் சென்று நான் ஆட்டமிழந்தேன். இந்த போட்டியில் கூடுதல் பந்துவீச்சாளருடன் விளையாடலாம் என்று திட்டம் போட்டது பொய்த்து போனது.
இந்த போட்டியில் எங்களுடைய அணி ஒரு ஸ்பின்னரை தவறவிட்டது. இந்த தோல்வி மற்றும் இன்று நடந்தவை அனைத்துமே எனக்கு பெரிய பாடம். லிவிங்ஸ்டோன் மற்றும் சாம் கரண் போன்றவர்கள் இருந்ததால் எங்களால் ஷாருக்கானை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்ப முடியவில்லை என்று கூறினார் ஷிகர் தவான். இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அடுத்ததாக நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடதக்கது.