விராட் கோலியை மிஞ்சி ஐபிஎல்லில் சாதனை படைத்த ஷிகர் தவான். என்ன சாதனை தெரியுமா?
ஐபிஎல் 2023தொடரில் 66வது போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இமாச்சலத்தில் உள்ள தர்மஷாலா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச முட
ஐபிஎல் 2023தொடரில் 66வது போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இமாச்சலத்தில் உள்ள தர்மஷாலா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை.
ஏனென்றால் பவர்பிளேயே பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. இருந்த போதிலும் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படித்துள்ளர் படைத்துள்ளார். அதாவது பவுண்டரிகள் அடிப்பதில் ஷிகர் தவான் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில். ஐபிஎல் வரலாற்றில் 750 பவுண்டரிகள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ஷிகர் தவான்.
இதனையடுத்து இரண்டாவது இடத்தில டேவிட் வார்னர் 639 பவுண்டரிகளுடனும் விராட் கோலி 630 பவுண்டரிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இந்த போட்டியை பொறுத்தவரையில் முதலில் களமிறங்கிய களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்ப நிலையிலே சொதப்பி வந்தனர். பிரப்சிமரன் சிங் 2 ரன்களிலே ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் வந்த அதர்வா 19 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
Shikhar Dhawan becomes the first batter to reach 7⃣5⃣0⃣ fours in IPL history.
— CricTracker (@Cricketracker) May 19, 2023
📸: IPL/BCCI#CricTracker #PBKSvRR #ShikharDhawan pic.twitter.com/kl8hPVnQ4M
அணியின் கேப்டன் ஷிகர் தவான் அணிக்கு நல்ல ஸ்கோரை சேர்ப்பர் என எதிர பார்த்து வந்த நிலையில் 17 ரன்களில் ஆட்டமிழந்து அணியின் ரசிகர்களை ஏமாற்றினார். அதிரடி மன்னர் லிவிங்க்ஸ்டன் தனது பாணியை தொடர்வார் என எதிர் பார்த்த நிலையில் 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு புறம் நிதனகமாக விளையாடி வந்த 44 ரன்களில் ஷைனி வீசிய பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.
#ShikharDhawan became the first player to hit 750 fours in IPL
— Akhil Gupta 🏏 (@Guptastats92) May 19, 2023
இந்நிலையில் பொறுமையாக ஆடிவந்த சாம் கரண் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் அணியின் பௌலிங்கை சிதறடித்து வந்தனர். அதன் போது 19வது ஓவரில் மட்டும் 28 ரன்களை வாரி வழங்கினார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சூழல் பந்துவீச்சாளர் சாஹல். இறுதியில் சாம் கரண் 49 ரன்களிலும் ஷாருக்கான் 41 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது.