வாய்ப்பே அளிக்காமல் அணியில் இருந்து நீக்கப்பட்ட சென்னை அணியின் அதிரடி வீரர். பிசிசிஐ செய்த செயல்.

உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேட்ட நேரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அது இந்த வருடம் மாறும் என்றிருந்த நிலைய

By ·

உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேட்ட நேரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அது இந்த வருடம் மாறும் என்றிருந்த நிலையில் தொடர்கதையாக மீண்டும் தொடங்கியுள்ளது.

இருந்த போதிலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை போட்டியானது நடக்க இருப்பதினால் அதில் இந்தியா சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பல ஏற்பாடுகளையும் இந்திய அணி தீவிரமாக செய்து வருகிறது. குறிப்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி சோதனை செய்து வருகிறது. அதில் முதற்கட்டமாக இந்திய அணி 5 தொடர்களை கொண்ட டி20 போட்டியில் 2 இல் வெற்றி பெற்று 1இல் தோல்வியை தழுவி இன்று நான்காவது போட்டியை விளையாட உள்ளது.

அதன் முதல் படியாக இந்தியா vs ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, கெய்க்குவாட் போன்ற இளம் வீரக்ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இதற்கு அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

அதில் சூர்யகுமார்யாதவ் கேப்டன் அவர்கள் செயல்படுவார் என்றும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தற்பொழுது சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷிவம் துபே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அது தற்பொழுது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது அதேபோல டி20 தொடரில் மோசமாக செயல்பட்டு வரும் பிரசித் கிருஷ்ணா தற்போது அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆகாஷ் காணும் தற்போது இந்திய அணியில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார். ஆவேஷ் கானுக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பு கிடைத்த நிலையில் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் ஷிவம் துபே ஒரு போட்டியில் கூட இந்த தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை