என்னுடைய லட்சியம் இந்திய அணி மட்டுமே கிடையாது.. உலக கோப்பையையும் வெல்வேன் – சிவம் துபேவிற்கு தோனி கொடுத்த அறிவுரை.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 வது சீசன் ஒரு பரபரப்பானபோட்டியாக இருந்த்து. இதில் பத்து அணிகளும் முயற்சி செய்து இறுதியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆமதாபாத்தில் பைனலுக்கு வந்தன. ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட இற

By ·

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 வது சீசன் ஒரு பரபரப்பானபோட்டியாக இருந்த்து. இதில் பத்து அணிகளும் முயற்சி செய்து இறுதியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஆமதாபாத்தில் பைனலுக்கு வந்தன. ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட இறுதிப் போட்டியில், கடைசி ஓவரில் எல்லாம் அனல் பறந்தது.

அப்போது சென்னை அணிக்கு வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது, ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் களத்தில் இருந்தனர், மோகித் சர்மாவை எதிர்கொண்டனர். முதல் நான்கு பந்துகளில் வெறும் 3 ரன்களே கிடைத்த நிலையில் ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். இதில் குறிப்பிடத்தக்க வகையில் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த துபே, கடைசி ஓவரில் அவரும் ஜடேஜாவும் எப்படி யோசித்தார்கள் என்பதைப் பற்றிய சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அவர் பேசுகையில் ” கடைசி ஓவரில், எங்களுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன, நானும் ஜடேஜா பாயும் கிரீஸில் பவர் ஹிட்டர்களாக இருந்தோம். எங்களுடைய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். அந்த நம்பிக்கை எங்களைத் வெற்றி பெற தூண்டியது. யார் வெற்றி ரன்களை அடிப்பார்கள் என்று நாங்கள் கவலைப்படவில்லை. மோஹித் பாய் முதல் பந்திலேயே ஒரு அற்புதமான யார்க்கரை வீசினார், நான் அவருக்கு அழுத்தம் கொடுக்க ஒரு பெரிய ஷாட்டைத் திட்டமிட்டாலும், அடுத்த நான்கு பந்துகளையும் அவர் நன்றாக வீசினார் இதனால் 3 ரன்கள் மட்டுமே எடுத்தோம்.

இப்போது நாங்கள் கோப்பியை வெல்ல 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆனாலும் எங்கள் இருவருக்கும் ஒரு நேர்மறையான எண்ணமும், அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஐந்தாவது பந்தில், ஜட்டு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முற்றிலும் மாற்றினார். ஐபிஎல்லில், வீரர்கள் 3 அல்லது 4 ரன்கள் எடுப்பதை நீங்கள் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும், குறிப்பாக இவ்வளவு பெரிய மைதானத்தில் நான் வேகமாக ஓட வேண்டியிருக்கும்.

3 ரன்கள் சூப்பர் ஓவருக்கு வழிவகுக்கும். எனவே, நான் என்னை தயார் நிலையில் வைத்திருந்தேன், பேட்டில் பந்து பட்டு ஏற்கனவே ஒரு எல்லைக்கு சென்றுவிட்டதை உணராமல் என்னால் முடிந்தவரை வேகமாக ஓடினேன் என்றார் சிவம் துவே. மேலும் பேசிய அவர் கூறுகையில் “இந்தியாவுக்காக விளையாடுவதும், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும், இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்வதும்தான் எனது இலக்கு.

நான் செல்லும் திசை சரியானது. நான் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறேன் என்பதைப் பற்றி நான் எம்.எஸ். பாய்யாவிடம் ஆலோசனை கேட்கிறேன், மேலும் அவர் எப்போதும் என்னிடம் கிராஃப் மெதுவாக உயரும், எல்லாம் சரியாகிவிடும், நேரம் வரும் என்று கூறுகிறார் என்று நம்பிக்கை தெரிவித்தார் சிவம் துபே.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை