சென்னை வெப்பத்தில் கே.எல் ராகுல் 50 ஓவர் கீப்பிங் செய்துவிட்டு பேட்டிங்கும் செய்தார் – ரிஸ்வான் சதம் குறித்து அக்தர் பேச்சு.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் அணியாது அணிகளுமே தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியானது கிட்டத்தட்ட முதல் போட்டியில் தோல்வியடைய இருக்கும் நேரத்தில் அசாதாரணமான வென்றியை ஆஸ்திரேலிய அணிக்கு

By ·

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் அணியாது அணிகளுமே தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியானது கிட்டத்தட்ட முதல் போட்டியில் தோல்வியடைய இருக்கும் நேரத்தில் அசாதாரணமான வென்றியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பதிவு செய்தது. குறிப்பாக அந்த போட்டியில் காயத்தில் இருந்து திரும்பி வந்த கேஎல் ராகுல் அசத்தியிருந்தார்.

இக்கட்டான நேரத்தில் அற்புதமாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடு தந்தார். அதே போல மறுபுறம் பாகிஸ்தான் அணியும் இலங்கை அணிக்கு எதிராக தடுமாறிய நேரத்தில் அற்புதமாக விளையாடிய முகமது ரிஸ்வான் சதம் அடித்தார். மேலும் அது பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் அடுத்துவற்றும் போட்டிகளில் வெற்றியடையவில்லை என்றால் அரையிறுதி போட்டிகளுக்கு செல்வதில் கொஞ்சம் பிரச்னை இருக்கும்.

அந்த மாதிரியான சூழ்நிலையில் முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த சூல்நிலையில் நேற்று நடந்த போட்டியின் போது காலில் தசை பிடிப்பு ஏற்பாடு முகமது ரிஸ்வான் கொஞ்சம் சிரமப்பட்டார்.ஏனெனில் அவர் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பதால் 50 ஓவர்கள் கீப்பிங் செய்துவிட்டு பேட்டிங் செய்யவேண்டும்.

இந்நிலையில் தான் இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் பாக் வீரர் அக்தர். அவர் யூடியூப் சேனலில் பேசுகையில் “முகமது ரிஸ்வானுக்கு அடிக்கடி தசை பிடிப்புகள் வரும். நீங்கள் ஒரு பெரிய யூனிட் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, மேலும் 50 ஓவர்களுக்கு விக்கெட் கீப்பிங் செய்து விட்டு சதம் அடிக்க வேண்டும் என்பது உடலுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. ஆனால் கேஎல் ராகுலும் சென்னையின் சூட்டில் விக்கெட் கீப்பிங் செய்து கிட்டத்தட்ட சதம் அடித்தார் என்றார் அக்தர்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “முகமது ரிஸ்வான் ஒரு அற்புதமான ஆட்டத்தால் பாகிஸ்தானை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவரது இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் அவர் பேட்டிங் செய்த விதம் மிகவும் முக்கியமானது. 70 ரன்களைக் கடந்த பிறகு அவர் அடித்த விதம் பார்க்க மிகவும் மனதைக் கவரும். அவர் தனது நாட்டிற்காக விளையாடி அவர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்தார். “

அப்துல்லா ஷபீக் ஒரு வாய்ப்பில்லாத இன்னிங்ஸ் ஆடினார். அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்திருந்தால், பாகிஸ்தான் நிறைய ஓவர்கள் மீதமிருக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருக்கும். அவர் என்ன ஒரு சிறந்த சூப்பர் ஸ்டார்! உலகக் கோப்பை அறிமுகத்தில் சதம இதனை விட ஒரு சிறந்த சிறந்த தொடக்கத்தை கேட்க முடியாது என்று கூறினார் அக்தர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை