இப்படி பண்ணிட்டிங்களே…இது அவமான தோல்வியா? பாகிஸ்தான் அணியை சாடிய சோயித் அக்தர்.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் விளையாடும் இந்த அணியே உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாள் மழை காரணமாக தடைபட்ட நிலையில் அடுத்த நாள் மீண்டும் அந்த போட்டியானது தொடர்ந்த்து. மேலும் இந்த நாளில் அற்புதமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் சதம் விளாசி அசத்தி இருந்தனர்.இதனால் இந்திய அணி இந்திய அணி 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் விராட் மற்றும் ராகுல் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் கூறுகையில் ” பாகிஸ்தான் அணிக்கு இது ஒரு அவமானமான தோல்வி. பேட்டிங் செய்ய மிகவும் நல்ல மைத்தனத்தில் பாகிஸ்தான் முதலில் பந்து வீச தீர்மானித்தது ஒரு கவலைக்குரிய முடிவென்று எனக்கு வித்தியாசமாக தோன்றியது.
இருப்பினும் ஒரே ஒரு தோல்விக்காக இந்தியாவைப் போலவே நீங்கள் பாகிஸ்தானை குறைத்து மதிப்பிட முடியாது. எனவே பாகிஸ்தான் கம்பேக் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை செய்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.பொதுவாகவே இது போன்ற போட்டிகளில் டாஸ் வென்று என்ன செய்யலாம் அல்லது பந்து வீச்சில் என்ன மாற்றங்களை செய்யலாம் என்பது போன்ற முடிவுகள் தான் வெற்றியில் முக்கிய பங்காற்றும்.
அதை சரியாக செய்வதற்கு நம்முடைய அணி நிர்வாகம் கேப்டன் அல்லது வீரர்கள் சாதுரியமாக இருக்க வேண்டும். என்னை கேட்டால் இந்த ஒரு பேட்டிங் பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் இந்தியாவுக்கு பேட்டிங்கை கொடுத்தது ஆரம்பத்திலேயே வெற்றியை கொடுத்ததற்கு சமமாகும் என்று கூறியுள்ளார் சோயித் அக்தர்.