இதை எதிர்பார்க்கவில்லை… உலக கோப்பையில் இந்தியா ஆபத்தான அணியாக இருக்கும் – யூடர்ன் அடித்த சோயப் அக்தர்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்றது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று க
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்றது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.
அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. கோப்பையையும் வென்றது. ஆனால் அதற்கு முன்னர் வங்காள தேசத்தோடு நடந்த போட்டியில் இந்தியா பெரும் தோல்வியை சந்தித்து இதனால் இந்திய அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள். மேலும் காயத்தில் இருந்த வந்த கே எல் ராகுல் மற்றும் பும்ரா மீது பல விமர்சனங்கள் வந்தாலும் அவற்றை தங்களது விளையாட்டின் மூலம் தரைமட்டம் ஆக்கினார்கள்.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய அணி தடுமாறுகிறது என்றும் மாற்றங்கள் செய்து தங்களை தாங்களே அளித்து கொள்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் இந்திய அணி ஆசிய கோப்பை 2023 இறுதி போட்டியில் வென்ற நிலையில் இந்திய அணி குறித்தும் உலக கோப்பை போட்டியில் இந்தியா ஒரு ஆபத்தான அணியாக இருக்கும் என்று விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில் “கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷி நன்றாகவே முன்னேறியுள்ளது. மேலும் அணி நிர்வாகம் சிறந்த முடிவுகளை எடுக்கிறது. இந்திய அணியானது இலங்கையை இப்படி வீழ்த்தும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் தற்போதிலிருந்து உலகக் கோப்பையில் இந்திய அணியானது மிகவும் ஆபத்தான அணியாக இருக்கப்போகிறது
இந்தியா இப்படிப்பட்ட ஒரு வெற்றியை பதிவு செய்ததற்காக நான் மற்ற நாடுகளை குறைத்து மதிப்பிடவில்லை. மேலும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி தன்னுடைய ஆட்டநாயகன் விருது பரிசை மைதான பராமரிப்பாளர்களுக்கு கொடுத்தது மகத்தான செயலாகும். இந்த வெற்றியால் உலகக் கோப்பையில் இந்தியா மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் இத்தொடரை இந்தியா சற்று தடுமாற்றம் நிறைந்த அணியாகவே இருந்தது
ஆனால் தற்போது அவர்கள் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல உலகின் இதர அணிகளுக்கும் கவலையை ஏற்படுத்தும் அணியாக இந்தியா மாறியுள்ளது. அதனால் தற்போது இந்தியா உலகக் கோப்பையில் தங்களுடைய வருகையை வலுவாக அறிவித்துள்ளது. ஏனெனில் அவர்கள் அனைத்து கட்டங்களையும் நிரப்பியுள்ளனர் என்று கூறியுள்ளார் சோயப் அக்தர்.