திறமை இருக்கு ஆனா அதுக்கு சரிபட்டு வரமாட்டார் – ரோஹித் கேப்டன்சி குறித்து சோயப் அக்தர் ஓபன் டாக்.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை தொடரானது தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி போட்டியில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்துவரும் இந்திய அணி அதனை தகர்த்து ரோஹித் சர்மா தலைமையில் இந்த முறை உலக கோப்பையை வென்று அந்த 10 ஆண்டுகால
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை தொடரானது தொடங்கி தற்போது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி போட்டியில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்துவரும் இந்திய அணி அதனை தகர்த்து ரோஹித் சர்மா தலைமையில் இந்த முறை உலக கோப்பையை வென்று அந்த 10 ஆண்டுகால தொடர்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு தகுந்தாற் போலவே இந்த முறை உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் அது இந்திய அணிக்கு பலம் கூட்டும் ஒன்றாக இருந்து வருகிறது, அதே சமயம் வீரர்களும் சரியாக பொருந்தியது போல தெரிவதினால் இந்த முறை கண்டிப்பாக இந்தியா உலக கோப்பை போட்டியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்திய அணியை தலைமை தாங்கும் ரோஹித் சர்மா குறித்தும் பலவிதமான விமர்சனங்கள் வருகிறது.
குறிப்பாக முக்கியமான நேரத்தில் தவறுகளை செய்வதாக பாலரும் விமர்சனம் செய்கின்றனர். மேலும் அந்த தவறுகளை ரோஹித் அழுத்தினால் செய்கிறார் என்றும் ஆவர் ஒரு திறமை வாய்ந்த பேட்மேனாக இருந்தாலும் கேப்டன்சியை பொறுத்தவரையில் தடுமாறுகிறார் என்றும் விமர்சிக்கின்றனர். இந்த நிலையில் தான் ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து பேசியுள்ள முன்னாள் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.
அவர் கூறுகையில் “ரோஹித் சர்மா ஒரு சிறந்த வீரர் தான். இருந்த போதிலும் கேப்டன்சியின் போது அவர் சில சமயங்களில் பயப்படுவார். நான் இங்கு சற்று கடுமையாகத் சொல்வதாக தோன்றலாம், ஆனால் அவர் இந்திய கேப்டன் பதவியை ஏற்றிருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர் விராட் கோலியை விட திறமையானவர். அவர் ஒரு கிளாசிக்கல் பேட்டர். ஆனால் அவர் கேப்டன்சிக்காக உருவாக்கப்பட்டாரா? நெருக்கடியான சூழ்நிலைகளில் அவர் நன்றாக ரியாக்ட் செய்வாரா? என் மனதில் எழும் கேள்விகள் இருந்தன.
நீங்களும் கேள்வி கேட்க வேண்டும். ஆனால் ரோஹித் சர்மாவுக்கு திறமை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த உலகக் கோப்பையை அவரால் வெல்ல முடியும். அதற்க்கான ஆதரவும் அவருக்கு சொந்த நாட்டில் நன்மையும் நல்ல அணியும் உள்ளது என்று அவர் மேலும் கூறினார் சோயப் அக்தர்.
மேலும் பேசிய அவர் பேசுகையில் “விராட் கோலி அதிகமாக ஆக்ரோஷமாக இருந்தார், அதே நேரத்தில் ரோஹித் சர்மா மிகவும் பீதியடைந்தார். இதற்கு நான் இந்திய ஊடகங்களைக் குறை கூறுவேன். ஏனென்றால் எந்த மாதிரியான நிலையிலும் தோற்றுவிட கூடாது என்ற ஒரு எண்ணத்தை அவர்கள் அனுமதிப்பதே இல்லை, நான் கேட்கிறேன் அவர்கள் தோல்வி அடையவே மாட்டார்களா? என்று ஊடகங்களை விமர்சித்து கூறினார் சோயப் அக்தர்