சச்சின் மீது மதிப்பு கூடுகிறது.. இப்போது கிரிக்கெட் ஏமாற்று வேலை – சோயிப் அக்தர் அதிரடி கருத்து.

கிரிக்கெட் என்பது இந்தியாவில் தோன்றாமல் இருந்தாலும் இந்தியாவில் தான் அதிகமான மக்கள் கிரிக்கெட்டை ரசிக்கின்றனர். இந்தியாவின் முதன்மையான விளையாட்டாக கிரிக்கெட் தற்போது இருந்து வருகிறது. கிரிக்கெட்டின் மீது உள்ள மோகம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அடங்கிய பாடில்லை. சொல்லப்போ

By ·

கிரிக்கெட் என்பது இந்தியாவில் தோன்றாமல் இருந்தாலும் இந்தியாவில் தான் அதிகமான மக்கள் கிரிக்கெட்டை ரசிக்கின்றனர். இந்தியாவின் முதன்மையான விளையாட்டாக கிரிக்கெட் தற்போது இருந்து வருகிறது. கிரிக்கெட்டின் மீது உள்ள மோகம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அடங்கிய பாடில்லை. சொல்லப்போனால் இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெருவதை திருவிழா போல கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்.

ஆனால் கிரிக்கெட் தொடங்கிய நாளில் இருந்து பலவிதமான மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக கடந்த 20 ஆண்டுகால கிரிக்கெட்டில் பலவிதமான மாற்றங்கள் கிரிக்கெட்டில் விதிமுறையை நடந்துள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 50 ஓவர்கள் கிரிக்கெட் தோன்றிய பிறகு ரசிகர்களின் ஆர்வம் என்பது கிரிக்கெட்டின் மீது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

மேலும் விதிமுறையிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக பந்துவீசும் இருபுறமும் புதிய பந்துகள கொடுக்கப்படும். இதன் காரணமாக 25 ஓவர்கள் மட்டுமே ஒரு பந்தில் வீசுவார்கள். இதனால் போட்டிங் செய்வதற்கு எளிதாக இருக்கும். அதே நேரத்தில் பந்து பழையதாக காரணத்தினால் பந்துவீச்சாளர் பந்தியை ரிவர்ஸ் ஸ்விங் செய்த கடினமாக முயற்சி செய்வார். இருந்த போதிலும் பந்து தெயாமல் இருப்பதினால் அது நடக்காது.

அதே போல பீல்டர்கள் 11 முதல் 40 ஓவர்கள் வரையில் 5 பேர் வெளியே இருந்தார்கள். இதனால் பேட்டிங் செய்யும் வீரர் ரன்களை குவிக்க கொஞ்சம் கடினமாக இருக்கும், மேலும் அது பந்துவீசும் அணிக்கும் கொஞ்சம் சாதகமாக இருந்து அழுத்தம் கொடுக்க முடிந்தது.

ஆனால் தற்போது உள்ள விதிமுறையின் படி 4 பீல்டர்கள் மட்டுமமே 11 முதல் 40 ஓவர்களில் போது வெளியே இருப்பதினால் பந்துவீச்சாளர்களால் ரன்கள் செல்வதை கட்டுப்படுத்த முடிவதில்லை. மேலும் டி ஆர் எஸ் இல்லாத போது அம்பயரின் முடிவே இறுதியாக இருந்தது. இதனால் ஒரு பேட்ஸ்மேன் 99 ரன்களில் கூட LPW ஆனாலும் கூட அவர்களுக்கு அதனை சரிபார்க்க முடியாமல் ஆட்டமிழக்க நேரிடும்.

ஆனால் தற்போது டிஆர்எஸ் என்பது இருப்பதினால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையின் போது அதனை பயன்படுத்தி வீரர்கள் ஆட்டமிழப்பதை தவிர்த்து கொள்கின்றனர். சொல்லப்போனால் சச்சின் டெண்டுல்கரின் காலத்தில் டிஆர்எஸ் இருந்திருந்தால் இன்னமும் அதிக ரன்களையும் சதங்களையும் அவர் அடித்திருப்பார் என்பதில் சந்தேகமே கிடையாது. இந்த நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் வீரர் யோயிப் அக்தர் தற்போது உள்ள கிரிக்கெட் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “இன்றைய கிரிக்கெட் ஒரு மோசடி போல எனக்கு தோன்றுகிறது . இரண்டு புதிய பந்துகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் பேட்டர்ஸ் 30,000 ரன்களை குவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக், முகமது யூசுப் மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோர் 50 ஓவர்களில் மென்மையான பந்துகளில் ரன் குவித்ததால் அவர்களை மதிக்கிறேன். அப்போது ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டு ரன் அடிக்கும் யாருடனும் நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை