“ரோஹித் உங்களை வெச்சி செஞ்சிட்டாரு. உங்களை குழந்தை மாதிரி இந்தியா ஜெயிச்சது” – பாக். வீரர்களை வெளுத்த சோயப் அக்தர்

உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி தலா 6 பவுண்டரி சிக்சருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

30.3 ஓவரிலேயே இந்த எளிய இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் அனைவரும் வந்தே மாத்திரம் பாடியது மெய் சிலிர்க்க வைத்தது.இந்த தோல்வி பாக். வீரர்களை விளாசிய சோயப் அக்தர்.

சோயப் அக்தர்:

2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றை மீண்டும் இந்திய அணி செய்துள்ளது. அரை இறுதியில் அவர்கள் குழப்பம் அடையவில்லை என்றால் உலகக்கோப்பை போட்டி அவர்கள் தான் வெல்வார்கள். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தில் வெற்றி கண்டது. நீங்கள் எங்களை Destroyed செய்தீர்கள். நீங்கள் எங்களுக்கு மனச்சோருக்கு உள்ளாக்கி உள்ளீர்கள். எங்கள் ஆட்டத்தை அழித்து விட்டீர்கள். எனக்கு அவமானம் தான் கண்முன் வருகிறது என்னால் அதை பார்க்கவே முடியவில்லை என்று பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக சாடியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை