டிராவிட் என்ன பாக்க 2 மணிநேரம் வெயிட் பண்ணாரு – மோயிப் மாலிக் சுவாரசிய தகவல்.

இந்திய அணி தற்போது உலக கோப்பை போட்டியில் முதன்மையான அணியாக இருந்து வருகிறது ஏற்கனவே நடந்த 6 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி புல்லிபட்டியலில் தற்போது வலுவான ஒரு இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த அணியை முன்னாள் இந்திய வீரரான ராகுல் ட்ராவிட் வழிநடத்தி செல்கிறார். மேலும

By ·

இந்திய அணி தற்போது உலக கோப்பை போட்டியில் முதன்மையான அணியாக இருந்து வருகிறது ஏற்கனவே நடந்த 6 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி புல்லிபட்டியலில் தற்போது வலுவான ஒரு இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த அணியை முன்னாள் இந்திய வீரரான ராகுல் ட்ராவிட் வழிநடத்தி செல்கிறார். மேலும் இதக்ற்கு முன்னர் ட்ராவிட் 19 வயத்ரிக்கு உட்பட்டோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில் தான் கங்குலி கேட்டுக்கொண்ட காரணத்தினால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்தார். இவர் வந்த பிறகு சில மாற்றங்கள் இந்திய அணியில் நடந்தாலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும், உலக கோப்பை போட்டியிலும் இந்தியா வலுவான அணியாக இருந்து வருகிறது

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரரான மோயிப் மாலிக் சுவாரசிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவர் பேசுகையில் “நாங்கள் பாகிஸ்தானில் இருந்து நியூசிலாந்துக்கு பயணம் செய்து கொண்டிருந்தோம். அதே நேரத்தில் அதே விமானத்தில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி பயணம் செய்து கொண்டிருந்தது. அப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். நான் தூங்கிக் கொண்டிருந்தேன், அவர் என்னிடம் பேச விரும்பியதால் நான் எழுந்திருக்க இரண்டு மணி நேரம் காத்திருந்தார்.

அவர் என்னிடம் பாகிஸ்தான் அணிக்கு பல முறை நான் கம்பீக கொடுத்திருக்கிறேன். இதனை அறியவே அவர் உங்களைத் தூண்டுவது எது?’ என்று கேட்க விரும்பினார். மேலும் அவர் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு பயிற்சியளித்து வருவதால் இதனை அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க விரும்பினார். எனவே, நான் இதன் மூலம் சொல்ல விரும்புவது என்னவென்றால், அவருக்கு ஈகோ இல்லை.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர் கற்றுக்கொள்ள விரும்பினார். அவர் தனது சொந்த வாழ்க்கையில் நிறைய ஏற்ற தாழ்வுகளைக் கண்டார். அவர் என்னிடம் கேட்டார், அவருக்கு என்னுடைய கதையா சொன்னேன். நான் அதை மிகவும் விரும்பினேன். கற்றல் செயல்முறை ஒருபோதும் முடிவடையாது, இன்று ராகுல் டிராவிட்டின் கீழ் இந்திய அணி எங்கு நிற்கிறது என்பதைப் பாருங்கள் என்று கூறினார் மாலிக்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை