அவர் இல்லாமல் இது நிறைவடையாது – ஐசிசியை வெளிப்படையாக தாக்கிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்.

உலக கிரிக்கெட்டின் சாம்பியன் தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்களது சொந்த மண்ணில் நடத்த உள்ளனர். சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்ப

By ·

உலக கிரிக்கெட்டின் சாம்பியன் தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்தியா வரலாற்றில் முதல் முறையாக இத்தொடரை முழுவதுமாக தங்களது சொந்த மண்ணில் நடத்த உள்ளனர். சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா முழுவதுமாக சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் விளையாட உள்ளது வரும் அக்டோபர் மாதம் முதல் விளையாட இருக்கிறது.

இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்தியா நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதை தொடர்ந்து இந்த உலகக் கோப்பை சிறப்பாக நடத்துவதற்காக போட்டிகள் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் உள்ளிட்ட முக்கிய மைதானங்களை நவீனப்படுத்தவும் பிசிசிஐ பல கோடிகளை நிதியாக ஒதுக்கி வேலைகளை துவங்கியுள்ளது.

அதே போல உலகக் கோப்பையை தற்போது உலகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வைத்து மக்களிடையே காட்சிப்படுத்தும் வேலையை ஐசிசி செய்து வருகிறது. இதில் ஒன்றுதான் உலக கோப்பை போட்டிக்கான ப்ரோமோ. 2.13 நிமிட நீளம் கொண்ட அந்த வீடியோவில் ஷிகர் தவான், ஜெமிமா ரோட்ரிகஸ், தினேஷ் கார்த்திக், சுப்மன் கில் போன்றவர்களும். முத்தையா முரளிதரன், ஜான்டி ரோட்ஸ் போன்ற ஜாம்பவான் வீரர்களும் இயன் மோர்கன் போன்ற நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இதில் சில மறக்கவே முடியாத நிகழ்வுகளான 1975இல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் க்ளைவ் லாய்ட் முதல் முறையாக கோப்பையை வென்றது முதல் 2011இல் எம்எஸ் தோனி சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தது வரை உலகக் கோப்பை நிகழ்வுகளை ஐசிசி அந்த வீடியோவில் இணைத்துள்ளது. அது போக விராட் கோலி, பென் ஸ்டோக்ஸ் போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்கள் அந்த வீடியோவில் இருந்தனர்.

ஆனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனும் கிரிக்கெட் பொறுத்தவரையில் சிறந்த வீரருமான பாபர் அசாம் முகம் ஒரு நொடி கூட அந்த வீடியோவில் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக 1992 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வென்ற தருணம் கூட அந்த வீடியோவில் இல்லாதது ரசிகர்களுக்கு ஆர்த்தியை கொடுத்தது. ஆனால் ஷாஹீன் அப்ரிடி மட்டுமே அந்த வீடியோவில் வந்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் இது குறித்து தண்டுபாய் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

அவர் போட்டிருந்த பதிவில் “பாகிஸ்தான் மற்றும் பாபர் அசாமின் குறிப்பிடத்தக்க இருப்பு இல்லாமல் இந்த உலகக்கோப்பை விளம்பரம் முழுமையடையும் என்று நினைத்தவர் உண்மையில் ஒரு நகைச்சுவையான படத்தையே காட்டினார். நண்பர்களே இது வளர வேண்டிய நேரம்” பதிவிட்டிருக்கிறார். ஐசிசி இப்படி செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்றாலும் சமீபத்தில் பாஸ்கிதான் நடந்து கொண்ட விதம், உலக கோப்பையில் பங்குபெற மாட்டோம் என்று கூறியவற்றை கருத்தில் கொண்டு இதனை செய்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை