அந்த தருணத்திற்கு பிறகு என்னுடைய விளையாட்டை மாற்றினேன் – ஆட்டநாயகன் சுப்மன் கொடுத்த பேட்டி.
ஐபிஎல் 2023 தொடரில் குவாலிபயர் 2ல் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத்தை அணி மிகவும் சிறப்பாக விளையாடி 20 வது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 233 ரன்களை குவித்தனர். இதில் சுப்மன் மட்டுமே 60 பந்துகளில் 129 ரன்களை விளாசினார். இந்நிலையில் 234 எ
ஐபிஎல் 2023 தொடரில் குவாலிபயர் 2ல் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய குஜராத்தை அணி மிகவும் சிறப்பாக விளையாடி 20 வது ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 233 ரன்களை குவித்தனர். இதில் சுப்மன் மட்டுமே 60 பந்துகளில் 129 ரன்களை விளாசினார். இந்நிலையில் 234 என்ற இமாலய இலக்குடன் களமிறககிய மும்பை அணிக்கு தொடக்கமே மிகப்பெரிய சரிவாக இருந்தது.
வதேரா முதல் ஓவரில் அவுட்டாகி வெளியேறினர்.அதன் பின்னரே அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 8 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். திலக் வர்மா, கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் மட்டுமே ரன்கள் குவித்த நிலையில் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே அடித்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் மும்பையின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சுப்மன் கில்
அவர் இந்த போட்டியில் 60 பந்துகளில் 129 ரன்களை விளாசினார். அதோடு இந்த ஐபிஎல் தொடரில் இவர் அடித்த மூன்றாவது சதம் இது. அதுவும் ஐபிஎல் பிளே ஆஃபில் இப்படிப்பட்ட ஒரு விளையாட்டை காட்டுவது என்பது சாதாரண காரியம் கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் தான் சுப்மன் கில்லிற்கு ஆட்டநாயகன் விருந்து வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர் அணியையும் தன்னுடைய இந்த விளையாட்டிற்கு காரணத்தையும் கூறினார்.
சுப்மன் கில் பேட்டி :
அவர் கூறுகையில் “நான் எல்லா பந்துகளையும் ஒரே மாதிரியாக எதிர்கொள்கிறேன். பின்னர் எனக்கு தொடக்கம் கிடைத்தும் நான் பெரிய ஷாட்டுகளுக்கு செல்கிறேன். ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடித்தது எனக்கு நம்பிக்கையை கொடுத்து இந்த என்னுடைய நாளாக இருக்கலாம் என்று தோன்றவைத்தது. இது பேட்டிங் செய்ய சரியான மைதானம். ஒரு கிரிக்கெட் வீரராக நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் நமக்கு நம் மீது நம்பிக்கை வேண்டும்.
This is madness from Shubman Gill. pic.twitter.com/HqjLYZnRBN
— Johns. (@CricCrazyJohns) May 26, 2023
சர்வதேச கிரிக்கெடிற்கு பின்னர் ஐபிஎல் சீசனில் ஆடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நான் நன்றாக தொடங்கும் போது, என்னால் நன்றாக ஸ்கோர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடந்த WI சுற்றுப்பயணத்திலிருந்து, நான் என்னுடைய விளையாட்டை மாற்றிவிட்டேன். கடந்த 2021ஆம் ஆண்டு எனக்கு காயம் ஏற்பட்டது. அப்போது என்னுடைய விளையாட்டில் நான் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினேன்.
என் மீது மற்றவர்கள் வைக்கும் எதிர்பார்புகளை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுகொண்டுளேன். ஐபிஎல் தொடரில் இதுவரையில் ஆடியதில் சிறப்பான சீசன் இதுதான். நான் தான் ஆரஞ்சு கேப் என்று எனக்கு தெரியாது. அப்போது நான் கழிவறை சென்றிருந்தேன். போட்டியின் போது வியர்வை அதிகம் கண்ணுக்குள் சென்றது. எங்களுடைய பந்துவீச்சார்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். எந்த இடத்தில் மைதானம் சிறியதாக இருக்கிறது என்பதை கணித்து விலையிடுவதுதான் என்னுடைய திடமாக இருந்தது என்றார் சுப்மன் கில்