வெளியானது ஐசிசி ஒருநாள் தரவரிசை, விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில்.

இன்னும் சில மாதங்களில் உலகக்கோப்பை இந்தியாவில் நடக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.சமீபத்திய ODI தரவரிசை ஐசிசி புதன்கிழமை வெளியிட்டது, இதில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் இளம் தொடக

By ·

இன்னும் சில மாதங்களில் உலகக்கோப்பை இந்தியாவில் நடக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.சமீபத்திய ODI தரவரிசை ஐசிசி புதன்கிழமை வெளியிட்டது, இதில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஐடன் மார்க்ரம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் போன்றோர் தற்போது சில இடங்கள் முன்னேறி உள்ளனர்.

ஐசிசி ஒருநாள் :

சொல்லப்போனால் சுப்மன் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தரவரிசையை இருந்து வருகிறார். அதே சமயம் கில்-கோலியைத் தவிர முதல் 10 இடங்களில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே உள்ளார் என்பது இந்திய அணிக்கு பெருமை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறியுள்ளார். அதாவது விராட் கோலி இப்போது ODI தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதே நேரத்தில் தற்போது ஐபிஎல் போட்டியில் கலக்கிக் கொண்டிருக்கிற இளம் தொடக்க வீரர் ஷுப்மான் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தரவரிசையை பெற்றுள்ளார். அவர் தற்போது அவர் 738 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே சமயம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் 887 ரேட்டிங்குகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவர்களை போலவே ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னரும் 1 இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ஆனால் தென் ஆபிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் 2 இடங்கள் சரிந்து ஏழாவது இடத்திலும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 707 மதிப்பெண்களுடன் எட்டாவது இடத்திலும் உள்ளனர். இவர்களை தொடர்ந்து சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக 175 ரன்களை குவித்த எய்டன் மார்க்ரம் குவாண்டம் அவர்களும் 13 இடத்திற்கு முன்னேறி 41வது இடத்திற்கு வந்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் ODI நிலை :

இந்நிலையில் பந்துவீச்சாளர்கள் பட்டியலை பார்க்கும் பச்சத்தில் முதல் இடத்தில் ஜோஷ் ஹேசில்வுட். இரண்டாவது இடத்தில டிரென்ட் போல்ட், மூன்றாவது இடத்தில் முகமது சிராஜ், 4வது இடத்தில் மிட்செல் ஸ்டார்க், 5வது இடத்தில் மேட் ஹென்றி. உள்ளிட்டோர் இருக்கின்றனர் ஆனால் இந்தியாவில் இருந்து ஒரு பந்துவீச்சாளர்கள் கூட முதல் பத்து இடங்களில் இல்லை என்பது வருத்தமான ஒரு விஷயம். அதோடு ஆல்ரவுண்டர் பட்டியலிலும் இந்திய வீரர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை