இது ஐபிஎல் நீங்க பார்க்காத வீரர்களை பார்ப்பீர்கள்… நாங்க அந்த ஓவர் வரைக்கும் கேம்ல தான் இருந்தோம் – கேப்டன் ஷுப்மான் கில் பேச்சு

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது இந்தியாவில் மார்ச் 22 முதல் தொடர்ந்து தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோ

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 தற்போது இந்தியாவில் மார்ச் 22 முதல் தொடர்ந்து தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 17வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. பஞ்சாப் அணி இதற்க்கு முன் நடந்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. அதேபோல் மற்றொரு பக்கம் குஜராத் டைட்டன்ஸ் அணி இது வரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் மட்டும் தோல்வியை தழுவி இருந்தது

இந்த இரு அணிகளும் இன்று போட்டியில் பலப்பரீட்சை செய்வது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் பஞ்சாப் அணியின் அணியின் கேப்டன் ஷிகர் தவன். அது முதலில் குஜராத் அணிக்கு தான் சிறப்பாக அமைந்தது. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் குஜராத் அணிக்காக ரன்களை அடித்து விளாசி இருந்தார். அவர் தனது விக்கெட்டை இழந்து வெளியேறிய பின் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தனது அதிரடி ஆட்டத்தால் அணிக்கு ரன்களை குவித்து வந்தனர். இறுதியில் குஜராத் அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை குவித்து இருந்தது.

குஜராத் அணியில் அதிகப்பட்சமாக அணியும் கேப்டன் ஷுப்மான் கில் 48 பந்துகள் 89 ரன்களை எடுத்து விளாசி இருந்தார். அதில் 6 பவுண்டர்களும் 4 சிக்சர்களும் அடங்கும் அதன் பின்பு தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் பத்தொன்பது பண்டிகளில் 33 ரன்களை அவர் அடித்து இருந்தார்ல. பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சார்பில் சற்று சுமாராக இருந்தது. அதில் ராபடா இரண்டு விக்கெட்டுகளையும் ஹர்ப்ரீத் மற்றும் ஹர்ஷால் படேல் தலா ஒரு விக்கெட்டுகளையும் மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.

அதன் பின் 200 இலக்கை கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அணிக்கு ஆரம்பமே சோதனையாக இருக்க கேப்டன் ஷிகர் தவன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வீர்களும் மிடில் ஆர்டரில் சற்று சொதப்பலாக விளையாடி இருந்தாலும் ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா இணைந்து அணியின் வெற்றிக்கு அருகில் வரை கொண்டு சென்றன. இந்த போட்டியில் அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் ரன்களும் அசுதோஷ் சர்மா 31 ரன்களையும் அவர் அடித்து இருந்தனர். குஜராத் அணியின் பந்துவீச்சு பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக இருந்தாலும் மிடில் ஆர்டர் சுமாராகவே இருந்தது.

எனவே பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதில் ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்களை அடித்து அணியின் வெற்றியை பெற்று கொடுத்தார். இவரை தான் பஞ்சாப் அணி நிர்வாகம் வீரரை மாற்றி எடுத்தது விட்டதாக கூறி இருந்தனர். ஆனால் இவர் தன்னுடைய திறமையால் இன்று போட்டியை மாற்றி அமைத்து பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார்.இதில் குஜராத் அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தாலும் 9 கேட்ச்களுக்கு மேல்விட்டனர். இது குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மான் கில் கூறுகையில்,

இது போன்ற போட்டிகளில் கேட்சுகளை விடும் போது அது எதிர் அணிக்கு எளிதானதாக மாறி விடுகிறது. இந்த நிலையில் ரன்களை பாதுகாப்பது கடினம். புதிய பந்து எதையாவது செய்கிறது. மேம்படுத்த வேண்டிய பகுதிகள் எப்போதும் உள்ளன. 200 போதும்னு நினைக்கிறேன்.15வது ஓவர் வரைக்கும் ஆட்டத்தில இருந்தோம்.. கேட்சுகளை ட்ராப் பண்ணும்போது கஷ்டம் வரும்.கடந்த மேட்ச்சில் நல்கண்டே வீசிய விதம் கடைசி ஓவருக்கு அவரோட போனது.. இது ஐ.பி.எல். உங்களுக்காக – நீங்கள் இதுவரை பார்க்காதவர்கள் வந்து விளையாடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை