சுப்மன் கில்லிற்கு டெங்கு காய்ச்சலா? ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடுவாரா? – முழு விபரம் இதோ.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது நேற்று கோலாகலமாக இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் கடந்த 2019 வருடம் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியும் கடந்த 2019ல் இறுதி போட்டியில

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது நேற்று கோலாகலமாக இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் கடந்த 2019 வருடம் உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியும் கடந்த 2019ல் இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோத இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியானது வரும் 9ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியானது சென்னையில் உள்ள புகழ்பெற்ற சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதனால் சென்னை ரசிகர்களும் இந்திய ரசிகர்களும் 2023 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் வெற்றியை காண ஆவலுடன் எதிர்பாத்து காத்துக்கொண்டிருக்கின்ற்றனர்.

அப்படிப்பட்ட நிலையில் தான் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரான சுப்மன் கில்லிற்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. கிடைத்த தகவல்களின் படி சுப்மன் கில் சென்னை வந்ததில் இருந்தே கடுமையான காய்ச்சல் இருந்து வந்ததாகவும் இன்று ஒரு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும், அதனை பொறுத்தே அவர் வரும் போட்டிகளில் விளாடுவாரா? இல்லையா என்பது தெரியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஒருவேளை காய்ச்சல் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்பட்ட சுப்மன் கில் களமிறங்கலாம் என்றும் ஆனால் அவை அனைத்தும் மருத்துவர்களின் முடிவாகத்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் கலந்து கொள்வது சந்தேகம் தான் என்று சொல்லப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் சுப்மன் கில் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் தொடக்க வீரராக திறமையாக விளையாடி வருகிறார். மேலும் உலகின் சிறந்த தொடக்க வீரராக கருதப்படும் சுப்மன் கில் இந்த வருடத்தில் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 72.35 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார். இதனால் சுப்மன் கில் ஒருவேளை சில போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தால் அது இந்திய அணியக்கு பெரும் சவாலாக இருக்கும்.

இருந்த போதிலும் அணியின் பேக்கப் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷான் இருவரும் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து விளாடுவார்கள். ஏனென்றால் இஷான் கிஷான் கடந்த சில போட்டிகளில் தொடக்க வீரராக நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் கேஎல் ராகுவிற்கு தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவம் இருப்பதினால் பெரிய பாதிப்பு ஒன்றும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இன்னும் சில மணிநேரங்களில் அதிகாரப்பூர்வ தகவலானது கிடைத்து விடும்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை