இவர் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்து விட்டார் – தோல்விக்கு பிறகு வருத்தம் தெரிவித்த டுப்ளஸி .

ஐபிஎல் 2023ன் கடைசி லீக் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இதில் சிறப்பாக விளையாடியும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை தட்டி சென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்க

By ·

ஐபிஎல் 2023ன் கடைசி லீக் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள சின்ன சாமி மைதானத்தில் மோதின. இதில் சிறப்பாக விளையாடியும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றியை தட்டி சென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா பௌலிங்கை தேர்வு செய்தார். அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி மற்றும் டு பிளசிஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர்.

டு பிளசிஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க. மேக்ஸ்வெல் 11 ரன்களிலும் லோமரோர் 1 ரன்னில் அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். அதன் பின் வந்த தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இருந்த போதிலும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 60 பந்துகளிலே தனது அடுத்தடுத்து சதத்தை பூர்த்தி செய்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தனர்.

இந்நிலையில் 198 ரன்கள் இலக்கை துரத்த வந்த குஜராத் அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. சாஹா 12 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில் விஜய் சங்கர் பொறுமையாக சுப்மன் கில்லிற்க்கு துணையாக ஆடினார். மேலும் 39 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார் சுப்மன் கில். இதனால் ஆர்சிபி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இந்த வருட பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

டுப்ளஸி கூறியது :

மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்று நாங்கள் மிகவும் அருமயாக ஆடினோம். ஆனால் இண்டாவது இன்னிங்கில் அதிகம் ஈரம் இருந்ததினால் பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்பட முடியாமல் போனது. இதனால் பந்தை கூட சில முறைகள் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விராட் மிகவும் சிறப்பான ஆட்டத்தை இன்று விளையாடினார். அதோடு நாங்கள் அடித்த ஸ்கோர் போதும் என்று நினைத்தோம். ஆனால் சுப்மன் கில் திறமையாக ஆடி வெற்றியை எங்களிடம் இருந்து பறித்து விட்டார்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. இடையே சில ரன்கள் விட்டிருப்போம். ஆனால் நாங்கள் நினைத்த அளவிற்கு விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. விராட் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினார். இந்த சீசன் முழுவதும் தொடக்க பாட்னர்ஷிப் 40 ரன்களுக்கு குறையாமல் இருந்தது என்று நினைக்கிறன். ஆனால் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் இந்த சீசன் முழுவதும் சிறப்பாக செயல்படவில்லை. அதுவே அணி சரிய காரணமாக போனது.

திணேஷ் கார்த்திக் கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இந்த வருடம் அப்படி இருக்கவில்லை. எங்களுடைய அணிக்கு 5 மற்றும் 7 இடங்களில் இறங்கி அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன் இருந்திருந்தால் வெற்றி அடைய வாய்ப்பு இருந்திருக்கும் என்று வருத்தம் தெரிவித்தார் டுப்ளஸி. இந்த வருடம் ஐபிஎல் சீசனில் ஆர்சிபி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அதிலும் ராஜஸ்தான் அணியை 59 ரன்களில் வீழ்த்திய நிலையில் பிளே ஆஃப் செல்லாதது ரசிகர்களுக்கு மாற்றத்தை கொடுத்துள்ளது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை