“ஐபிஎல் மிகப்பெரிய போட்டிகளில் ஓன்று” வெளிப்படையாக கூறிய ஜிம்பாப்வே வீரர்.
ஐபிஎல் 2023 தொடரின் 21வது லீக் ஆட்டம் தற்போது நடந்தது வருகிறது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ்சுடன் எக்கான ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடந்தது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முயற்சி செய்தது. அது சரியாக இருந்ததா என்று கேட்டல் கண்டிப்பாக சரியான
ஐபிஎல் 2023 தொடரின் 21வது லீக் ஆட்டம் தற்போது நடந்தது வருகிறது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸ்சுடன் எக்கான ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடந்தது. இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முயற்சி செய்தது. அது சரியாக இருந்ததா என்று கேட்டல் கண்டிப்பாக சரியான முடிவு தான். கிட்டத்தட்ட அணைத்து அணிகளுமே டாஸ் வென்றால் முதலில் பந்துவீசத்தான் செல்கின்றனர்.
அந்த வகையில் முதலில் பந்துவீசிய பஞ்சாப் அணியின் வீரர்கள் சரியான பந்துகளை வீச தொடங்கினார்கள். லக்னோ அணியும் அதற்கு தகுந்தாற் போல பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சொல்லப்போனால் பவர் பிளே முழுவதுமே அவர்களின் ஆட்டம் அந்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகு 7.4 ஓவரில் தான் ஹர்ப்ரீத் பிரார், மேயரிடம் அவுட் ஆனார்.
அதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பொறுமையாக ரன்களை சேர்க்க லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பொறுமையாக இருந்து 56 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரும் பந்துவீச்சாளர் சப்பிடம் ஆட்டமிழந்தார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தனர்.இந்நிலையில் இதற்கு அடுத்தது களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே அதிக விக்கெட்டுகள் விழுந்தது.
அதுவும் சுலபமான சேசிங்க் கடைசி வரையில் சென்றதற்கு காரணம் பஞ்சாப் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தினால் தான். எனவே பொறுமையாக ஆடினார்கள் பஞ்சாப் பேட்ஸ்மேன்ஸ். குறிப்பாக சிக்கந்தர் ராசா பொறுமையாக இருந்து அரை சத்தம் அடித்தார். ஆனால் அவரும் பின்னர் ஆட்டமிழந்தார் இதனால் பஞ்சாப் அணியின் அழுத்தம் அதிகமாகியது. இருந்த போதிலும் கடைசியில் ஷாருக்கான் சிறப்பாக விளையாடி பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சிக்கந்தர் ராசா கூறியுள்ள தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சிக்கந்தர் ராசா பேட்டி :
அவர் கூறியதாவது “நான் உண்மையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஆட்டமிழந்ததும் என்னுடைய எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் ஷாருக்கிற்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். அரை சதம் அடித்ததில் மகிழ்ச்சி தான், ஆனால் நாங்கள் ஒருவேலை நாங்கள் போட்டியில் அந்த விஷியதால் நான் அவ்வளவு நன்றாக உணர்ந்திருக்க மாட்டேன். ஐபிஎல் என்பது மிகப்பெரிய அரங்காகும். நீங்க்ள் இந்த போட்டியில் கலந்து கொண்டு திறமையை காட்ட விரும்புகிறீர்கள்.
Had some laughing reactions when I said that Sikandar Raza was the biggest steal of IPL Auction. Today he proves why. He is most dynamic player in Punjab Kings setup right now. What a talent in just 75 lac rupees. #LSGvPBKS #IPL2023 #CricketTwitter pic.twitter.com/018v48yjNL
— Himanshu Pareek (@Sports_Himanshu) April 15, 2023
நான் இந்த சீசனில் இரண்டு சராசரி விளையாட்டுகளை ஆடியிருந்தேன். அது என்னுடைய மனதிலேயே இருந்தது. ஜிட்சின் விக்கெட் போட்டியில் முக்கியமானதாக இருந்தது. அவர் 6-8 பந்துகள் வரையில் இருந்தார். அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரே முடித்து கொடுத்திருப்பார். ஆனால் பின்னர் ஷாருக் தனது முதல் பந்தையே சிக்சர் அடித்த விதத்தினால் நான் அவரின் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன் என்றார் பாக்கிஸ்தான் வீரர் சிக்கந்தர் ராஷா.