அர்ஜுன் டெண்டுல்கரை ட்ரெண்ட் போல்ட்டுடன் ஒப்பிட்டு பாராட்டிய நியூசி வீரர் சைமன் டௌல்.

ஐபிஎல் 2023தொடர் தொடங்கி தற்போது 2வது கட்டத்தை எட்டியுள்ளது. பல அணிகள் கிட்டத்தட்ட 8 போட்டிகளை ஆகிவிட்டது. அதோடு இந்த சீசனில் பல அற்புதங்களையும் பார்த்திருக்கிறோம் குறிப்பாக கடைசி ஒரு ஓவரில் 31 ரன்கள், கடைசி ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள் என பல இருந்தன. இருந்த போதிலும் சில வீரர்கள் ம

By ·

ஐபிஎல் 2023தொடர் தொடங்கி தற்போது 2வது கட்டத்தை எட்டியுள்ளது. பல அணிகள் கிட்டத்தட்ட 8 போட்டிகளை ஆகிவிட்டது. அதோடு இந்த சீசனில் பல அற்புதங்களையும் பார்த்திருக்கிறோம் குறிப்பாக கடைசி ஒரு ஓவரில் 31 ரன்கள், கடைசி ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள் என பல இருந்தன. இருந்த போதிலும் சில வீரர்கள் மோசமான பேட்டிங் மற்றும் பௌலிங்கை காட்டினார்கள். அந்த வகையில் ஒருவரை குறை வேண்டும் என்றால் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் அவர்களை கூறலாம்.

அர்ஜுன் டெண்டுலகர் கடந்த 3 வருடங்களாக மும்பை அணியில் இருந்து வந்தார் ஆனால் இந்த தொடரில் தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படி அர்ஜுன் விளையாடிய முதல் போட்டியில் அற்புதமாக பந்துவீசி தன்னுடைய அப்பாவை டக் அவுட்டாகியவரின் விக்கெட்டை தன்னுடைய முதல் விக்கெட்டாக வீழ்த்தினார். அதற்கு பிறகு ஆடிய ஆட்டம் தாம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயமாக இருந்தது.

அந்த சம்பவம் மும்பை vs பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடந்தது. இந்த போட்டியில் 16 வது ஓவரை வீச வந்தார். அப்போதுதான் 31 ரன்களை ஒரே ஓவரில் வாரி வழங்கினார். அது இந்திய ரசிகர்கள் அனைவருக்குமே அதிற்சியாக இருந்தது. மேலும் சோசியல் மீடியாவில் அர்ஜுன் டெண்டுகரை கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும் ரோஹித் சர்மா கடந்த GT vs MI போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இந்நிலையில் தான் பிரபல நியூசிலாந்தை சேந்த வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் டௌல் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “சமீபத்தில் மும்பை அணியின் பஞ்சாபிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்விக்கு பிறகும் அவரை போல ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பளிப்பது அந்த வீரர் கிரிக்கெட்டில் வளர்வதற்காக செய்யும் கடைசி முயற்சியாகும். அப்போது ரன்கள் விட்டிருந்தாலும் அதற்கு முன்னர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.ஆனால் அவர் இன்னமும் போட்டியின் கடைசி ஓவர்களில் பந்துவீசும் அளவிற்கு இல்லை.

அதனை ரோஹித் சர்மாவும் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். அர்ஜுன் டெண்டுல்கர் டெத் ஓவர்களில் போடும் பவுலர் கிடையாது. அப்படியிருக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்த போது அது தோல்வியை தழுவியது. தீபக் சஹர், டிரெண்ட் போல்ட் போன்ற வீரர்கள் கூட முதல் 2.3 ஓவர்களில் பேட்ஸ்மேன்களை தங்களுடைய பந்துவீச்சால் அச்சுறுத்துவார்கள் ஆனால் கடைசி ஓவரில் ரன்களை அதிகமாக கொடுப்பார்கள். அவர்களை போலத்தான் டெத் ஓவர்களில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நடக்கிறது என்று கூறினார் சைமன் டௌல்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை