விராட் இத பண்ண தேவையில்லை.. குப்பையை எதற்கு படிக்க வேண்டும் – பதிலடி கொடுத்தாரா? சைமன் டவுல்.

உலக இந்திய அணியில் விராட் கோலி ஒரு நம்பமுடியாத வீரர். அவருடைய விளையாட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெருமையாக பேசப்படும் அளவிற்கு பல திறமைகள் அவரிடம் இருக்கிறது. பல ஜாம்பவான் வீரர்களே அசரும் அளவிற்கு அவர்களின் சாதனைகளை முறியடித்து வருகிறார் விராட் கோலி. மேலும் பல ஐபிஎல்

By ·

உலக இந்திய அணியில் விராட் கோலி ஒரு நம்பமுடியாத வீரர். அவருடைய விளையாட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெருமையாக பேசப்படும் அளவிற்கு பல திறமைகள் அவரிடம் இருக்கிறது. பல ஜாம்பவான் வீரர்களே அசரும் அளவிற்கு அவர்களின் சாதனைகளை முறியடித்து வருகிறார் விராட் கோலி. மேலும் பல ஐபிஎல் தொடர்களிலும் அதிக ரன்களை அடித்து பல முடை ஆரஞ்சு கேப்பும் வாங்கியுள்ளார் விராட்.

இருந்த போதிலும் விராட் தன்னுடைய ஐபிஎல் அணியான பெங்களூருவுக்கு ஒரு கோப்பையை கூட ஒரு கேப்டனாக பெற்று தர முடியவில்லை. இந்நிலையில் இந்த சீசனில் விராட் ஆர்சிபியின் கேப்டனாக இல்லாத நிலையில் அவரது ஆட்டமும் கொஞ்சம் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக அவரது ஸ்ட்ரைக் ரேட் என்பது கடந்த சில போட்டிகளாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி கூறுகையில் : ஸ்டிரைக் ரேட் மற்றும் நான் விளையாடுவதைப் பற்றி பேசும் அனைவரும் இந்த விஷயங்களைப் பற்றி பேச விரும்புகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது விளையாட்டில் வெற்றி பெறுவது மட்டுமே. 15 வருடங்களாக நான் இந்த வேலையை செய்து வருகிறேன் என்றார் கோலி.

மேலும் பேசிய அவர் கூறுகையில் : வர்ணனை செய்யும் இடத்தில் இருந்து விளையாட்டைப் பற்றி பேசுவதற்கு, நீங்கள் அந்த சூழ்நிலையில் இருந்திருக்கவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் தங்கள் சொந்த யோசனைகள் மற்றும் விளையாட்டைப் பற்றிய அனுமானங்களைப் பற்றி பேசுகின்றனர் என்றார் கோலி.

இந்நிலையில் தான் வர்ணனையாளரான சைமன் டவுல் இது குறித்து பேசியுள்ளர். அவர் கூறுகையில் : விராட் கோலி சமூக ஊடகங்களில் நிறைய விஷயங்களைப் படித்து அதற்கு அவர் எதிர்வினையாற்றுகிறார் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் படிக்கவில்லை என்றால், அவரது அணியில் இருக்கும் யாராவது ஒருவர் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரர், போட்டிக்குப் பிறகு அந்த விஷியங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை.

இந்த வருடத்தில் இது முதல் முறை நடத்து கிடையாது. போட்டிக்கு பிறகு ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டும் வழக்கத்தை விட்டார் கொண்டுள்ளார். அவர் சமூக ஊடகங்களில் உள்ள குப்பைகளைப் படித்துவிட்டு இந்த மாதிரியான பெரிய அறிக்கைகளை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றார் என்று சைமன் டவுல்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை