கோலி குறித்து விமர்சனம் செய்த்தற்கு எனக்கு கிடைத்து இதுதான்.. உண்மையை உடைத்த சைமன் டவுல்.
இந்திய அணியின் மிகவும் முக்கியமான ஒரு வீரர் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு சர்வதேச அளவில் சாதனைகளை புரிந்து வருபவர் விராட் கோலி. தற்போது உள்ள நவீன கால கிரிக்கெட் யுகத்தில் பாரம்பரிய ஷாட்டுகளின் மூலம் ரன்களை குவிப்பதில் விராட் அற்புதமான ஒரு வீரர். இதனை பல வெளிநாட்டு வீ
இந்திய அணியின் மிகவும் முக்கியமான ஒரு வீரர் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு சர்வதேச அளவில் சாதனைகளை புரிந்து வருபவர் விராட் கோலி. தற்போது உள்ள நவீன கால கிரிக்கெட் யுகத்தில் பாரம்பரிய ஷாட்டுகளின் மூலம் ரன்களை குவிப்பதில் விராட் அற்புதமான ஒரு வீரர். இதனை பல வெளிநாட்டு வீரர்களே வியந்து பாராட்டி கூறியுள்ளனர். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் விராட் அதிக ரங்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை பெற்றார்.
இருந்த போதும் விராட் கோலி குறித்து பலவிதமான விமர்சனங்கள் வந்தபடியாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் நடந்தது முடிந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி பொறுமையாக விளையாடுகிறார் என்றும் ஸ்ட்ரைக் ரேட் குறித்த விமர்சனங்களும் எழுத்தது. இதன் போது தான் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் சைமன் டவுல் விராட் கொலை 67 பந்துகளில் சதம் அடித்தது குறித்து பேசியிருந்தார்.
இந்த விஷயம் குறித்து பலரும் விமர்சனம் செய்திருந்தாலும் இவர் பேசியது தற்போது ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் இதே போன்று பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் பாபர் அசாம் குறித்து விமர்சனம் செய்த்தற்கு சைமன் டவுல் தங்கியிருந்த ஹோட்டலை விட்டே வெளியில் வர முடியாத அளவுக்கு ரசிகர்கள் நெருக்கடியை பற்றியம் விராட் கோலியை விமர்சித்தால் தனக்கு ஏற்பட்ட நிலை பற்றியும் தினேஷ் கார்த்தியுடனான பேட்டியில் பேசியுள்ளார் சைமன் டவுல்.
அவர் கூறுகையில் : விராட் கோலி ஆட்டமிழந்து விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கும் அளவிற்கு அவர் மிகவும் நல்ல வீரர், அதுவே அவரைச் சுற்றி எப்போதும் இருந்தது. நான் விராட் கோலியைப் பற்றி ஆயிரம் பெரிய விஷயங்களைச் சொன்னேன், ஆனால் நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், அது சற்று எதிர்மறையாக அல்லது தவறாக கூட இருக்காம். இருந்த போதிலும் எனக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன.
அந்த விமர்சனம் ஒருபோதும் தனிப்பட்டது அல்ல. நாங்கள் சிறந்த உரையாடல்களை நடத்தியுள்ளோம். நான் அவரை டாஸ்ஸில் பேட்டி எடுப்பேன். ஆட்டங்களுக்குப் பிறகு விரட்டும் நானும் பேசுவோம். எந்தப் பிரச்சினையும் இல்லை. இதே போன்று பாபர் அசமுடனும் நடந்திருக்கிறது, ஆட்டம் முடிந்ததும் அவருடன் பேசுவதும் அதைத்தான். பயிற்சியாளர் தன்னிடம் அதையே கூறியதாகவும் அவர் என்னிடம் கூறினார் என்றார் சைமன் டவுல்.