காரணம் இல்லாமல் விவாதத்தில் ஈடுபட்ட சிராஜ் மற்றும் சால்ட் – வீடியோ உள்ளே.
ஐபிஎல் 2023 லீக்கில் 50 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. டெல்லி அணி தோல்விகளில் இருந்து வெளியேற இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தன. பெங்களூரு அணி லக்னோ அணிக்கு எதிரா
ஐபிஎல் 2023 லீக்கில் 50 வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதின. டெல்லி அணி தோல்விகளில் இருந்து வெளியேற இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்து வந்தன. பெங்களூரு அணி லக்னோ அணிக்கு எதிரான போட்டியை வென்றுள்ளது, இருப்பினும் இப்போட்டியை வென்றால் தான் புள்ளி பட்டியலில் முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் இருந்து வருகிறது.
டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான டுப்ளசிஸ் மற்றும் விராட் கோலி அணிக்கு அதிரடியான தொடக்கத்தையே கொடுத்தனர். 7 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்தது. அதன் பின்பு தான் பெங்களூரு அணிக்கு சோதனையாக கேப்டன் டுப்ளசிஸ் 45 ரன்களில் வெளியேற, அதன் பின்னரே மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அணிக்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் விளையாடி வந்த விராட் கோலி தன்னுடயை அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
முகேஷ் குமார் வீசிய பந்தில் விராட் கோலி அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு பக்கம் அற்புதமாக விளையாடிய லோம்ரோர் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களை நான்கு பக்கமும் சிதறடித்து வர அவருடன் இணைந்த தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் தனது அதிரடியை காட்டி ரன்களை உயர்த்தி வர 11 ரன்களில் அவரும் அவுட்டாகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 181 ரன்களை குவித்தது.
Mohammed Siraj engaged in a verbal fight with David Warner and Philip Salt@mohammadsiraj@davidwarner31 #RCBvsDC pic.twitter.com/zU2uNk2OiY
— 𝗩𝗶𝘀𝗵𝗮𝗹 𝗬𝗮𝗱𝗮𝘃 (@VishalY91054279) May 7, 2023
இந்நிலையில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடஸ் அணி தொடக்கமே மிகவும் சிறப்பாக இருந்தது. முதல் களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் சால்ட் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். இந்நிலையில் 4 ஓவர்கள் சிக்ஸர்களும் 4கலுமாக 41 ரன்களை எடுத்திருந்தது டெல்லி கேபிடல்ஸ். இந்நிலையில் 5வது ஓவரை சிராஜ் போட வந்தார். அப்போது முதல் இரண்டு பந்துகளில் 2சிக்ஸர்களை விளாசினார் சால்ட்.
அதற்கு பிறகு வந்த மூன்றாவது பந்து 4 ரன்கள் சென்றது, இதனால் கொஞ்சம் கலக்கமடைந்த சிராஜ் ஒரு ஒய்டுடன் 17 ரன்களை விட்டிருந்தார். ஆனால் திடீரென சல்ட்டுடன் விவாதத்தில் ஈடுபட்டார். அதோடு வார்னரும் இடையே வர கொஞ்சம் பதர்த்தமான சூழ்நிலை நிலவியது. அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிராஜ் செய்த இந்த செயலால் ரசிகர்கள் கடுமையாக டீவிமர்சித்து வருகின்றனர்.