கவலைப்படாதீங்க.. மயங்க் பௌலிங்க சமாளிக்க இது பண்ணுங்க போதும் – ஐடியா கொடுத்த ஸ்மித் மற்றும் ஹைடன்.

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தொடக்கம் முதல்லே அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு வீரர் என்றால் அது லக்னோ அணியின் மயங்க யாதவை கூறலாம். என்றால் தன்னுடைய மு

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தொடக்கம் முதல்லே அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு வீரர் என்றால் அது லக்னோ அணியின் மயங்க யாதவை கூறலாம். என்றால் தன்னுடைய முதல் பிடியிலேயே சுமார் 150 கிலோ மீட்டர் வீக்கத்தில் பந்துவீச்சை அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக கூட அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் மயங்க் யாதவ் இந்திய அணியில் சேரும் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டும் என்று பலரும் குறி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை குறி வருகின்றனர்.

இந்த நிலையில் மயங்க் பந்துவீச்சை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் பல அணிகள் திட்டம் போட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஹைடன் இருவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் அவரது மயங்க் வீசும் ஓவரில் எப்படி ரன்களை எடுப்பது என்பது குறித்தும் பேசியுள்ளார்

இது குறித்து ஸ்மித் பேசுகையில் “அவர் வீசும் பந்துகளை நீங்கள் பார்த்தால் அது மெதுவான இல்லை, எனவே இந்த கட்டத்தில் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் அதை தனது ஆயுதக் களஞ்சியத்தில் வைத்திருக்கலாம். ஆனால் அவரது பந்துகளை உங்களால் அடிக்க முடியும், அதாவது பந்தை லைனிற்குள் விட்டு விளையாடலாம். அல்லது பந்து உள்ளே வர அனுமதித்து விளையாடலாம். அணிகள் தற்போது அவரை எப்படி சமாளிப்பது என்று கண்டுபிடித்து வருகின்றனர்

மயங்க் மெதுவான பந்தை வீசினார் என்று நான் நினைக்கவில்லை. விக்கெட்டுக்கு பின்னால் ஸ்கோர் செய்து அவரை வித்தியாசமாக ஏதாவது செய்ய வைக்க அவர்கள் வேகத்தைப் பயன்படுத்த வேண்டும். அவர் விரைவாக பந்துவீசுகிறார், குறிப்பாக சின்னச்சாமியில் கொஞ்சம் மட்டையைப் பிடித்தால். பந்து ஓடுகிறது. எனவே அவரது வேகத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்த முயற்சிக்கவும்.

மேலும் சென்னை அணியின் முன்னாள் வீரர் கூறுகையில் “நீங்க அதை நீளத்திலும், வேகத்திலும் களமிறங்கினால் அவரது பந்துகளை அடிப்பது கடினம். அந்த வேகத்தில் ஒருவரை நீங்கள் விளையாடும் விதம் என்னவென்றால், பந்தை உங்களிடம் வர அனுமதிக்க வேண்டும். முன் கால் அல்லது பின் பாதத்தில் இருந்து கட்டாயப்படுத்த முயற்சிக்காதீர்கள். அழுத்தத்தை உள்வாங்கிக் கொள்ளுங்கள், பந்து வீச்சின் வேகத்தின் காரணமாக மீதமுள்ளதை பந்தின் வேகமே செய்யும் என்றார்..

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை