போட்டியில் எப்படி வெல்லணும்னு அவர பாத்து கத்துக்கோங்க – கங்குலி சொன்னது யாரை தெரியுமா?
ஐபிஎல் 2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதோடு இந்த ஐபிஎல் தொடரில் குவாலிபயர் 1ல் வெற்றி பெற்று பைனலுக்கு சென்றுள்ளது. கடந்த சீசனில் மிகவும் மோசமாக வ
ஐபிஎல் 2023 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதோடு இந்த ஐபிஎல் தொடரில் குவாலிபயர் 1ல் வெற்றி பெற்று பைனலுக்கு சென்றுள்ளது. கடந்த சீசனில் மிகவும் மோசமாக விளையாடி 9வது இடத்தில் ஐபிஎல் 2022 தொடரை முடித்த நிலையில் இந்த சீசன் சரியான கம்பாக் கொடுத்து முதல் ஆளாக பைனல் சென்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் BCCI தலைவருமான கங்குலி பேசுகையில் கிரிக்கெட் போட்டிகளில் எப்படி வெற்றியடைய வேண்டும் என்பது குறித்து தோனியிடமும், சிஎஸ்கே அணியிடமும் மற்ற ஐபிஎல் அணிகள் கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமான போட்டிகளிலும். நெருக்கடியான போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என தனது கேப்டன்சி மூலம் தோனி மற்றவர்களுக்கு கம்பிக்கிறார் என்று கூறியுள்ளார் கங்குலி.
இவர் சொல்வது ஒரு விதத்தில் நியாயம் தான். ஏனென்றால் கிரிக்கெட் போட்டிகளின் உச்சமான ICC நடத்தும் T20, ODI, TEST உள்ளிட்ட மூன்று உலககோப்பைகளிலும் வென்ற ஒரே கேப்டன் தோனி தான். அதுமட்டுமல்லாமல் பல போட்டிகளில் இக்கட்டான நிலைமைகளில் அணிக்கு நம்பிக்கை கொடுத்து வெற்றியடையவும் வைத்திருக்கிறார்.
சொல்லப்போனால் கடந்த 2019ஆம் ஆண்டு உலககோப்பை அரையிறுதியில் போது ரோஹித், கோலி, ராகுல் என மூன்று தொடக்க வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறிய நிலையில் ஜடேஜாவுடன் கைகோர்த்து இறுதி வரையில் போட்டியை எடுத்து சென்றார்.விக்கெட்டுகள் விழுந்திருந்தாலும் தோனி இருக்கும் வரையில் கண்டிப்பாக இந்தியா வெற்றியடையும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருந்தது.
ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை தோனி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் காட்டியிருக்கிறார். அதோடு அந்த போட்டி தான் தோனியின் கடைசி சர்வதேச போட்டி. தோனி இந்தியாவிற்காக ஆடும் போது முதல் போட்டியில் ரன் அவுட்டான நிலையில், தன்னுடைய கடைசி போட்டியிலும் ரன் அவுட்டாகி எங்கிருந்து தொடங்கினாரே அங்கேயே அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்கை முடிவுக்கு வந்தது குறிப்பிடதக்கது .