ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் செல்வார்.. எம்.எஸ் தோனியை பாருங்கள்.. எல்லாம் திறமை – கங்குலி ஓபன் டாக்.

உலக உலக புகழ்பெற்ற ஒருநாள் ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் நாடுகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு

By ·

உலக உலக புகழ்பெற்ற ஒருநாள் ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் நாடுகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் ஆர்சிபி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு அடுத்து ஒருவாரம் கழித்து ஜூன் மாதம் ஆரம்பத்தில் உலக கோப்பை டி20 தொடரானது ஆரம்பிக்க இருக்கிறது.இந்த தொடரானது ஆமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடக்க இருக்கிறது. மேலும் அமெரிக்க அணியும், கனடா அணி உள்பட உலகின் பல அணிகள் இந்த தொடரில் மோத இருக்கின்றனர்

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி குறித்து பலவிதமான விமர்சங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏற்கனவே தொடர்ந்து சர்வதேச உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி மண்ணை கவ்வி வரும் நிலையில் இந்த முறை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விக்கெட் கீப்பிங் செய்ய புதிய வீரர்கள் அறிமுக படுத்தப்படுவார்கள்.

அவர்களில் அதிகமாக இஷான் கிஷான், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட ஆகியோருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் தொடக்க வீரார்களிலும் சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உலக கோப்பை 2024 போட்டியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்தியா அணியின் கேப்டன் கங்குலி.

அவர் கூறியதாவது : ஒவ்வொரு இளம் வீரரும் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். துரதிர்ஷ்டவசமாக, கிரிக்கெட்டில் 15 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும். இது விளையாட்டுகளில் நடக்கும். விளையாடுவதற்கு மிகவும் பொருத்தமான மற்றும் சிறந்தவர்கலைவாணி தேர்ந்தெடுக்கும். பண்ட் கண்டிப்பாக அந்த எல்லைக்குள் இருக்கிறார் என்று நம்புகிறேன். மேலும் அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் செல்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்வார்கள். நீங்கள் என்னைக் கேட்டால் அது எனது தனிப்பட்ட கருத்து. தேர்வாளர்கள் அவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறவில்லை. நாள் முடிவில் அது தேர்வாளர்கள் மற்றும் கேப்டன் ரோஹித்தின் முடிவு தான்.

இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என்று எதுவும் இல்லை. நீங்கள் எவ்வளவு நன்றாக இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஜிம்மி ஆண்டர்சன் எப்படி விளையாடுகிறார்? இது டெஸ்ட் கிரிக்கெட் ஆனால் அவர் 41 வயதில் 30-31 ஓவர்கள் வீசும் வேகப்பந்து வீச்சாளர். இதற்கு கடினமான மற்றும் வேகமான விதிமுறை என்று எதுவும் இல்லை. அதற்கு ஒரே விதிமுறை திறமை மட்டுமே. எம்எஸ் தோனியைப் பாருங்கள் அவர் 2 ஓவர்களில் நான்கு சிக்ஸர்களை அடிப்பார் என்றார் கங்குலி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை