இந்த வீரரும் உலக கோப்பைக்கான அணியில் 2023ல் இருக்க வேண்டும் – இளம் வீரரை பரிந்துரை செய்த கங்குலி.

டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின

By ·

டெஸ்ட் அறிமுகத்தில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஆனதால் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று புத்தகங்களில் தனது பெயரை பொறித்து விட்டார். ஏற்கனேவே ஐபிஎல் வரலாற்றில் 13 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் தற்போது டெஸ்ட் போட்டியிலும் சாதனை படைக்க தொடங்கி விட்டார். டொமினிகாவின் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டெஸ்டின் 2 ஆம் நாளில் ஜெய்ஸ்வால் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் 229 ரன் என்ற நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்த பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இணைந்து விளையாடினர்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் தொடக்க போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்டவர் என்ற சாதனையையும், தொடக்க போட்டியிலேயே சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 13பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் படித்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அதோடு 625 ரன்களையும் வீழ்த்தினார். இதுமட்டுமல்லாமல் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலக கோப்பையில் மிகசிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 400 ரன்களை விளாசினார்.

இப்படி சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து செலவுக்காக பானி பூரி கடையில் வேலை பார்த்துக்கொண்டு தன்னுடைய கிரிக்கெட் ஆர்வத்தையும் வளர்த்து கொண்டு தற்போது இந்த அளவிற்கு வளர்ந்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பல முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களும் பாராட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் முன்னாள் தலைமை தேர்வாளருமான கங்குலி யஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி பேசியிருக்கிறார்.

கங்குலி கூறியது :

யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரும் ஒருநாள் உலக கோப்பையில் விளையாடுவதை நான் பார்க்க ஆசைப்படுகிறேன். சமீபத்திய ஐபிஎல் தொடரில் அவரை நான் மிகவும் அருகிலிருந்து பார்த்துள்ளேன். ஆனால் தன்னால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட முடியும் என்று காட்டியுள்ளார். அதனால் அவர் இந்தியாவுக்கு நீண்ட காலம் விளையாடுவதற்கு தேவையான தரத்தைக் கொண்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன்.

பொதுவாகவே டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதற்கு நான் விருப்பப்படுவேன். ஏனென்றால் அது எதிரணி பவுலர்கள் அடிக்கடி தங்களுடைய லென்த்தை வலுக்கட்டாயமாக இடது கை கேப்டர்களுக்காக மாற்ற வேண்டிய அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் கங்குலி யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வரும் ஆசிய கோப்பை அணியிலிருந்து வெளியே எடுத்து அவரை உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவினர் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியது போல தெரிகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை