இது ஒன்றும் இந்திய அணியின் சிறப்பான அணி கிடையாது. தென்னாபிரிக்கா அணி தான் என்னுடைய பேவரைட் அணி – முன்னாள் இந்திய வீரர்.
உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேட்ட நேரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அது இந்த வருடம் மாறும் என்றிருந்த நிலைய
உலக கோப்பை 2023 தொடரானது சமீபத்தில் இந்தியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேட்ட நேரம் தொடர்ந்து கொண்டே வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஐசிசி கோப்பை ஒன்றை கூட இந்திய அணியால் வெல்ல முடிவயில்லை. அது இந்த வருடம் மாறும் என்றிருந்த நிலையில் தொடர்கதையாக மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்த போதிலும் அடுத்த வருடம் டி20 உலக கோப்பை போட்டியானது நடக்க இருப்பதினால் இந்தியா அதில் இந்தியா சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்து நடக்க விற்கும் உலகக்கோப்பைக்கு பல ஏற்பாடுகளையும் இந்திய அணி தீவிரமாக செய்து வருகிறது. குறிப்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி சோதனை செய்து வருகிறது. அதன் முதல் படியாக இந்தியா vs ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, கெய்க்குவாட் போன்ற இளம் வீரக்ளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இதற்கு அடுத்து வரும் தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் , கேஎல் ராகுல் (வி.கே), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா.
3 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.
3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.
இது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திற்கு நான் இதை சிறந்த இந்திய அணியாக நான் பார்க்கவில்லை. அவர்களும் சிறந்த அணியாக இல்லை ஆனால் அவர்களுக்கு சொந்த மைதனத்தம் என்ற சாதகம் இருப்பதால் இந்தத் தொடர் முழுவதிலும் நாம் தென்னாப்பிரிக்கா அணியை எனது சிறந்த அணியாக நான் பார்க்கிறேன். நான் சொல்வது தவறாக கூட போகலாம். ஆனால் சில போட்டிகள் தென் ஆப்பிரிக்கா அணிக்கு தான் சாதகமாக அமையும் என்று நான் பார்க்கின்றேன். ஒட்டுமொத்தமாக மூன்று தொடரில் நடக்கும் எட்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் இருந்தும் என்றும் அவர் கூறியிருந்தார்.