இந்தியா பலமான அணிதான்.. இருந்தாலும் இந்த பிரச்னை இருக்கு – தென்னாபிரிக்க வீரர் கிரேம் ஸ்மித்.

தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரில் இந்தியா மிகவும் வலுவான ஒரு இடத்தில் இருந்து வருகிறது. இந்த உலக கோப்பை தொடர்நது இந்தியாவில் நடைபெறுவதினாலும், இந்திய அணி வலுவாக தெரிவதினாலும் இந்தியா இந்த உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையின் 6 போட்டிகளை விளையாடியுள

By ·

தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடரில் இந்தியா மிகவும் வலுவான ஒரு இடத்தில் இருந்து வருகிறது. இந்த உலக கோப்பை தொடர்நது இந்தியாவில் நடைபெறுவதினாலும், இந்திய அணி வலுவாக தெரிவதினாலும் இந்தியா இந்த உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையின் 6 போட்டிகளை விளையாடியுள்ள இந்தியா அதில் அனைத்திலுமே வெற்றிபெற நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது.

இருந்த போதிலும் இந்திய அணியிலும் சில கவலைகள் இருந்து வருகிறது அதாவது இந்தியாவின் ஆல்ரவுண்டரும் துணை கேப்டனுமாகிய ஹர்திக் பாண்டியா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார். அதே போல இந்தியாவின் பேட்டிங்கிலும் நம்பர் 4 க்கு பிறகு யாரும் பெரிதாக பேட்ங்கில் இந்த தொடரில் அசத்தவில்லை என்பதினால் அங்கு தற்போது தற்போது இந்தியா வேலை செய்து வருகிறது

இந்திய அழுத்தில் இருந்ததாக தெரியவில்லை. அவர்கள் இவ்வளவு நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். இந்தியா எப்போதும் உள்நாட்டில் வலுவாக உள்ளது, ஆனால் உலகக் கோப்பை போன்ற பெரிய நிகழ்வில் கூடுதல் அழுத்தம் உள்ளது, இருந்த போதிலும் அது அவர்களை பாதிக்கவில்லை. இந்திய அணியின் வீரர்கள் பேட்டிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு சில காயம் அடைந்த வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

ஹர்திக் பாண்டியா இந்திய அணியை சமநிலைப்படுத்துகிறார், ஆனால் கூடுதல் பந்துவீச்சாளர் விளையாடுவது அவர்களுக்கு நன்றாக வேலை செய்தது, அவர்கள் மிகவும் தாக்குதல் பேட்டிங் வரிசை என்பதால் மிகவும் தாக்குதல் பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ளனர். அவர்களால் எந்த அணியின் எதிர்ப்பையும் தகர்க்க முடியும். எதிர்பார்த்தபடி இந்தியா தற்போது ஒரு மேலாதிக்க எதிரணியாகவும் இந்த தொடரை வெல்லும் அணியாகவும் எனக்கு தெரிகிறது.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “இந்திய அணிக்கு நம்பர் 7ல் ஜடேஜா இருப்பது அதிர்ஷ்டம், ஆனால் ஒரு ஆல்-ரவுண்டரை இழந்து இந்த நேரத்தில் இந்தியா அதிக முன்னணி பந்துவீச்சு விருப்பங்களுடன் செல்ல முயற்சித்துள்ளது என்று நினைக்கிறேன், கூடுதல் பேட்டிங் விளையாடவில்லை. இதுவரை அது அவர்களுக்கு வேலை செய்கிறது. ஹர்திக் பாண்டியா நாக்கவுட் போட்டிகளுக்கு முன்பாக குணமடைய வேண்டும் என்று நினைக்கின்றனர். கடந்த முறையை விடவும் அதிகமாக முன்னேறியுள்ளனர் என்றார்
கிரேம் ஸ்மித்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை