GT-க்கு திரும்பிய 239 சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன், குஜராத் டைட்டன்ஸ் தான் அடுத்த கடப்பாறை அணியா?

உலகத்தில் மிகப்பெரிய டி20 போட்டியான ஐபிஎல் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே அதற்கான ரசிகர்கள் ஒத்துழைப்பும், ஆர்வமும் இமயத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடிக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டம் டெல்லியில் உள்

By ·

உலகத்தில் மிகப்பெரிய டி20 போட்டியான ஐபிஎல் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே அதற்கான ரசிகர்கள் ஒத்துழைப்பும், ஆர்வமும் இமயத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடிக்கும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையிலான ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

சொல்லப்போனால் இந்த தொரில் டெல்லி அணி தன்னுடைய சொந்த மைதானத்தில் விளையாடும் முதல் போட்டி இது என்றே கூறலாம். ஆனால் அதற்கு முன்னதாகவே டெல்லியின் முதல் ஆட்டத்தில் லக்னோவுடன் அந்த அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் கார் விபத்து காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்த ரிஷிப் பந்த் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிட்டார்கள்.

வெற்றி அடைய வேண்டிய கட்டாயம் :

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இன்று நடக்கும் 7வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அணி ஏற்கனவே தனது முதல் போட்டியில் தோல்வியடைந்துவிட்டதால், இப்போட்டியில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற மிகவும் முனைப்பாக உள்ளது. அதே நேரத்தில் அந்த டெல்லி அணி தன்னுடைய சிந்த மைதானத்தில் விளையாடுவதினால் வெற்றி பெற்றே ஆகவேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது.

குஜராத் அணிக்கு திரும்பிய வீரர் :

இவை ஒரு பக்கம் இருக்க குஜராத் டைட்டன்ஸ் அணியில் முதல் போட்டியில் அந்த அணியின் முக்கிய வீரர் கேன் வில்லியம்சன் காயம் அடைந்தனர். அதே நேரத்தில் உலக கோப்பை காரணமாக அணியின் பல வீரர்கள் விலகி இருந்தனர். ஆனால் தற்போது இந்த அணியின் முக்கிய வீரர் ஒருவர் அணியில் இணைந்திருப்பதால் குஜராத் கேப்டனுக்கு சற்று நிம்மதி கிடைத்திருக்க வேண்டும். அவர் தான் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லர்.

ஐபிஎல் தொடரில் டேவிட் மில்லர் :

தென் ஆப்பிரிக்க வீரரான டேவிட் மில்லர் ஐபிஎல் மற்றும் டி20 போட்டியில் நல்ல அனுபவம் இருக்கும் நபர். இதுவரை மொத்தம் 105 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதோடு இவர் ஆடிய 102 இன்னிங்ஸ்களில் 36.64 சராசரியுடன் 2455 ரன்கள் எடுத்து பலமான ஒரு போட்டியாளராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டேவிட் மில்லருடைய ஸ்ட்ரைக் ரேட் 137.69 ஆக இருந்தது. அதுமட்டுமாலல் ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்காக விளையாடி இதுவரையில் 1 சதம் மற்றும் 12 அரைசதங்கள் அடித்துள்ளார்.

சிறப்பான ஆட்டம் :

அடித்தொடு இவர் அடித்து ஆடக்கூடியவர் என்பதினால் எல்லா போட்டிகளிலும் கண்டிப்பாக ஒரு சிக்ஸரராவது அடுத்து விடுவார். அந்த வகையில் 113 சிக்ஸர்கள் மற்றும் 169 பவுண்டரிகள் அடித்துள்ளார் டேவிட் மில்லர். மேலும் கடந்த சீசனில் மில்லரின் விளையாட்டை பார்த்தோம் என்றால் ஐபிஎல் 2022ல் 16 போட்டிகளில் 68.71 சராசரியிலும் 142.72 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 481 ரன்களை அடித்துள்ளார், அதில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை