வீடியோ: கம்பீர் மூத்த வீரர்களையே மதிக்க மாட்டார். இவர் மக்கள் பிரதிநியாக இருந்து என்ன பயன்? – கம்பீரை விளாசிய ஸ்ரீசாந்த்.
தற்போது இந்தியாவில் நடைபெறும் லெஜன்ட் போட்டிகளில் இந்திய அணியில் இருந்து ஒய்வு பெற்ற முன்னாள் மூத்த வீரர்கள் தற்போது லெஜென்ட் லீக்கில் விளையாடிக் கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் நேற்று இந்திய கேப்பிடல்ஸ் அணி மற்றும் குஜராத் டைடன்ஸ் அணியும் நாக் அவுட் சுற்றில் நேற்று மோதின. அத
தற்போது இந்தியாவில் நடைபெறும் லெஜன்ட் போட்டிகளில் இந்திய அணியில் இருந்து ஒய்வு பெற்ற முன்னாள் மூத்த வீரர்கள் தற்போது லெஜென்ட் லீக்கில் விளையாடிக் கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் நேற்று இந்திய கேப்பிடல்ஸ் அணி மற்றும் குஜராத் டைடன்ஸ் அணியும் நாக் அவுட் சுற்றில் நேற்று மோதின. அதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக கௌதம் கம்பீரம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரீஷாந்த் செயல்பட்டனர்.
அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கௌதம் கம்பீரின் தலைமையிலான இந்திய கேப்பிட்டல்ஸ் அணி 20 அவர்கள் முடிவில் 223 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் இழந்து இருந்தது. 224 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 அவர்கள் முடிவில் 211 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்திய கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் 12 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் ஸ்ரீசாந்த் மட்டும் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மைதானத்தில் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் ஸ்ரீசாந்த் வீசிய பந்து கௌதம் கம்பீர் அடித்து நொறுக்கினார் அதனை தொடர்ந்து ஸ்ரீ சாந்த் வித்தியாசமான முறையில் அவர் பந்து வீசி இருந்தனர். அதனை அவர் அற்புதமாக அடித்து இரண்டு ரன்களை எடுக்க ஓடினார். அதன்பின் ஸ்ரீ சாந்த் பேட்ஸ்மேனை பார்த்து ஏதோ ஒன்று பேசி அவர்களை தூண்டிவிடுவது போல பேசியுள்ளார். அதற்கு பதில் அளித்த கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
Heated conversation between Gautam Gambhir and S Sreesanth in the LLC. pic.twitter.com/Cjl99SWAWK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 7, 2023
அப்போது அவர் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது குடும்பம் குறித்து மிகவும் மோசமாகவும் ஸ்ரீசாந்த் உடைய மாநிலம் குறித்தும் ஆபாசமாக பேசியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில் இங்கே என் மீது எந்த ஒரு தவறும் கிடையாது. விரைவில் அது குறித்து உங்களுக்கு தெரியும். கம்பீரோடு என்ன நடந்தது என்பது அவர் பேசியது என்ன நடந்தது என்று விரைவில் நான் உங்களுக்கு தெரிவிப்பேன். அவர் மூத்த வீரர்களான சேவாக் பாய் போன்ற மூத்த வீரர்களையும் அவர் மதிப்பது கிடையாது. அதே போல் தான் என்றும் என்னிடம் நடந்து கொண்டுள்ளார். அவர் என்னை மிகவும் திட்டியிருந்தார் கம்பீர அது போன்ற செயல்பட்டு இருக்க கூடாது.
அவர் பேசியபோது என் மாநிலம் குடும்பம் என எல்லாவற்றையும் குறித்தும் அவர் பேசியிருந்தார் அவர் சொல்லக்கூடாது விஷயத்தை எல்லாம் மைதானத்தில் அங்கு சொல்லியிருந்தார். அவர் என்ன சொன்னார் என்று சொன்னார் உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன். உங்களால் மைதானத்தில் விளையாடும் சக வீரர்களை மதிக்க முடியவில்லை என்றால் நீங்கள் மக்கள் பிரதிநியாக இருந்து என்ன பயன்? தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் கூட விராட் கோலி பற்றி கேட்டால் கூட அவர் பேசுவதில்லை. அங்கு அவர் வேறு ஏதாவது தான் அவர் பேசுவார். நான் இருக்கும் போது பற்றி விரிவாக பேச விரும்பவில்லை இதனால் மிகவும் புண்பட்டு இருக்கின்றேன் என்றும் ஸ்ரீசாந்த் வீடியோ வெளியிட்டு இருக்கின்றார்.
Sreesanth exposing Gambhir after their fight in LLCpic.twitter.com/IvVlT9De0v
— Pushkar (@musafir_hu_yar) December 7, 2023
அடுத்த போட்டி இரண்டாவது தகுதிச் சுற்று டிசம்பர் 7, வியாழன் அன்றும், இறுதிப் போட்டி டிசம்பர் 9 சனிக்கிழமையும் நடைபெறும். 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு கெளதம் கம்பீர் மற்றும் ஸ்ரீசாந்த் இருவரும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற உதவினார்கள். இவர்கள் இருவரும் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.