“என் தலைவனுக்கு தில்ல பார்த்தியா” கம்பீர் இன்ஸ்டா பதிவில் அவரையே விமர்சித்து கமென்ட் செய்த ஸ்ரீசாந்த்.
நேற்றைய லென்ஜன்ட் லீக் நாக் அவுட் சுற்றில் ஸ்ரீசாந்த் மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மைதானத்தில் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் ஸ்ரீசாந்த் வீசிய பந்து கௌதம் கம்பீர் அடித்து நொறுக்கினார் அதனை தொடர்ந்து ஸ்ரீ சாந்த் வித்தியாசமான முறையில் அவர்
நேற்றைய லென்ஜன்ட் லீக் நாக் அவுட் சுற்றில் ஸ்ரீசாந்த் மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மைதானத்தில் வார்த்தைகளால் சண்டையிட்டுக் கொண்டனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் ஸ்ரீசாந்த் வீசிய பந்து கௌதம் கம்பீர் அடித்து நொறுக்கினார் அதனை தொடர்ந்து ஸ்ரீ சாந்த் வித்தியாசமான முறையில் அவர் பந்து வீசி இருந்தனர். அதனை அவர் அற்புதமாக அடித்து இரண்டு ரன்களை எடுக்க ஓடினார். அதன்பின் ஸ்ரீ சாந்த் பேட்ஸ்மேனை பார்த்து ஏதோ ஒன்று பேசி அவர்களை தூண்டிவிடுவது போல பேசியுள்ளார். அதற்கு பதில் அளித்த கௌதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது அவர் ஸ்ரீசாந்த் மற்றும் அவரது குடும்பம் குறித்து மிகவும் மோசமாகவும் ஸ்ரீசாந்த் உடைய மாநிலம் குறித்தும் ஆபாசமாக பேசியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில் இங்கே என் மீது எந்த ஒரு தவறும் கிடையாது. விரைவில் அது குறித்து உங்களுக்கு தெரியும். கம்பீரோடு என்ன நடந்தது என்பது அவர் பேசியது என்ன நடந்தது என்று விரைவில் நான் உங்களுக்கு தெரிவிப்பேன். அவர் மூத்த வீரர்களான சேவாக் பாய் போன்ற மூத்த வீரர்களையும் அவர் மதிப்பது கிடையாது. அதே போல் தான் என்றும் என்னிடம் நடந்து கொண்டுள்ளார். அவர் என்னை மிகவும் திட்டியிருந்தார் கம்பீர அது போன்ற செயல்பட்டு இருக்க கூடாது.
அவர் பேசியபோது என் மாநிலம் குடும்பம் என எல்லாவற்றையும் குறித்தும் அவர் பேசியிருந்தார் அவர் சொல்லக்கூடாது விஷயத்தை எல்லாம் மைதானத்தில் அங்கு சொல்லியிருந்தார். அவர் என்ன சொன்னார் என்று சொன்னார் உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன். உங்களால் மைதானத்தில் விளையாடும் சக வீரர்களை மதிக்க முடியவில்லை என்றால் நீங்கள் மக்கள் பிரதிநியாக இருந்து என்ன பயன்? தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் நிகழ்சிகளில் கூட விராட் கோலி பற்றி கேட்டால் கூட அவர் பேசுவதில்லை. அங்கு அவர் வேறு ஏதாவது தான் அவர் பேசுவார். நான் இருக்கும் போது பற்றி விரிவாக பேச விரும்பவில்லை இதனால் மிகவும் புண்பட்டு இருக்கின்றேன் என்றும் ஸ்ரீசாந்த் வீடியோ வெளியிட்டு இருக்கின்றார்.
Heated conversation between Gautam Gambhir and S Sreesanth in the LLC. pic.twitter.com/Cjl99SWAWK
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 7, 2023
அதன் பின் இன்ஸ்டாகிராம் நேரலையில் ஸ்ரீசாந்த் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அப்போது கம்பீர் அவரை ஆபாச வார்த்தைகளால்அனைத்தையும் பற்றியும் அவர் நேரலையிலே பேசி இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில் கம்பீர் என்னை மேட்ச் பிக்ஸ்சர் என்று கூறி இருந்தார். (அதாவது சூதாட்டத்தில் ஈடுபட்டவர் என்று அர்த்தம்). அதுமட்டுமல்லாமல் கம்பீர் என்னை f-ck என்ற ஆங்கில கெட்ட வார்த்தை மிக மோசமாகவும் என்மையும் நடுவரையும் அவர் திட்டிருந்தார். ஐபிஎல் நடந்த காலகட்டத்தில் ஸ்ரீசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் மேட்ச் பிக்சிங் செய்தார் என்றும் அப்போது அவர் மீது குற்றச்சாட்டுகள் வெளியான நிலையில் அதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ குற்றச்சாட்டுகள் ஏதும் நிருபணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின் ஸ்ரீசாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கம்பீர் பதிவேற்றி இருந்த புகைப்படத்திற்கு கீழ் அவரை விமர்சித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவர் கூறுகையில், நீங்கள் ஒரு விளையாட்டு வீரர் மற்றும் ஒரு சகோதரன் என்ற எல்லையை தாண்டிவிட்டீர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். ஆனாலும், நீங்கள் ஒவ்வொரு கிரிக்கெட் வீரருடனும் தொடர்ந்து மோதல்களில் ஈடுபடுகிறீர்கள். உனக்கு என்ன ஆச்சு? நான் செய்ததெல்லாம் சிரித்துப் பார்த்து, என்னை சரி செய்பவன் என்று முத்திரை குத்தி விட்டீர்களா? தீவிரமாக? நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மேலே இருக்கிறீர்களா? அப்படிப் பேசுவதற்கும், நீங்கள் விரும்பியதைச் சொல்லுவதற்கும் உங்களுக்கு அதிகாரம் இல்லை.
நீங்கள் நடுவர்களை வார்த்தைகளால் திட்டினீர்கள், இன்னும் நீங்கள் புன்னகைப்பது பற்றி பேசுகிறீர்களா? நீங்கள் ஒரு திமிர்பிடித்த மற்றும் முற்றிலும் வர்க்கமற்ற நபர், உங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு எந்த வித மரியாதையும் இல்லை. நேற்று வரை உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எனக்கு மரியாதை இருந்தது. இருப்பினும், நீங்கள் “ஃபிக்ஸர்” என்ற இழிவான வார்த்தையை ஒரு முறை அல்ல, ஏழு அல்லது எட்டு முறை பயன்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் F-வார்த்தையை நடுவர்களையும் என்னையும் நோக்கிப் பயன்படுத்துகிறீர்கள், தொடர்ந்து என்னைத் தூண்டிவிட முயன்றீர்கள். நான் அனுபவித்ததை அனுபவித்த எவரும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். ஆழமாக, நீங்கள் சொன்னதும் செய்ததும் தவறு என்று தெரியும். கடவுள் கூட உங்களை மன்னிக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன். கடவுள் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கான்.