கேப்டன்சி இல்லைனா என்ன? இந்த சீசன் ரோஹித் மாஸ் பண்ண போறாரு பாருங்க – முன்னாள் வீரர் நம்பிக்கை.
உலக புகழ் பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகளில் விளையாடியுள்ள அணிகள் தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என இரண்டையும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர். மேலும் இந்த சீசனில் பெரிய மாற்றங்களும் நடைபெற்றது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அ
உலக புகழ் பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது நாடுகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகளில் விளையாடியுள்ள அணிகள் தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என இரண்டையும் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர். மேலும் இந்த சீசனில் பெரிய மாற்றங்களும் நடைபெற்றது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் பொறுப்பேற்றார். குஜராத் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றார். மேலும் பெரிய மிகப்பெரிய மாற்றமாக ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
இது சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் மற்ற அணிகளை போல மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களால் இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் பல ஆண்டு காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து இந்து கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா திடீரென மும்பை அணியின் கேப்டனாக இல்லை என்று கேள்விப்பட்டதும் ரசிகர்களுக்கு வருத்தமும் புதிய கேப்டனாகிய ஹர்திக் மீது வெறுப்பும் உண்டாக்கியது.
மேலும் மைதானத்தில் ஏற்பட்ட சில சம்பவங்கள் ரசிகர்களுக்கு மேலும் வெறுப்பை உண்டாக்கியது. மறுபுறம் ரோஹித் சர்மாவுக்கு இது நல்லதுதான் அவர் தன்னை எந்த அழுத்தமும் இல்லாமல் போட்டியில் ஈடுபடுத்தி கொள்வார் என்று சிலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் ஸ்ரீஷாந்த் ரோஹித் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது “கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கர் எம்.எஸ். தோனியின் கீழ் விளையாடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். மேலும் உலகக் கோப்பையையும் வென்றோம். புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கீழ் ரோஹித் சர்மா விளையாடுவதைப் பற்றி நிறைய கதைகள் கூறப்படுகின்றன. ஆனால் ரோஹித் சர்மா சுதந்திரமாக விளையாடுவதை விரும்புவார்.
எனக்குத் தெரிந்தவரை, ரோஹித் சர்மாவுக்கு கேப்டன்சி சுமை இல்லாமல் சுதந்திரமாக பேட்டிங் செய்ய விரும்புவார். மேலும் ஆரஞ்சு தொப்பியையும் இந்த சீசன் எடுக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் ஒரு சிறந்த சீசனை சந்திக்கப் போகிறார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை முன்னோக்கி வழிநடத்தினார். ஆனால் நான் உறுதியாக நம்புகிறேன். மும்பை இந்தியன்ஸை பின்னால் இருந்து வழிநடத்தப் போகிறார் என்று.
மாற்றத்திற்குத் தயாராக இருப்போம், மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம் என்று நான் கூறுவேன். ரோஹித் கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் அதே போல்தான் இருக்கப் போகிறார். அவர் தனிப்பட்ட முறையில் கடினமான காலங்களைச் சந்திப்பார் ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது அவரது முன்னேற்றத்தில் ஒரு சாம்பியனாக வெளிவரும். ரோஹித் இந்த சீசனில் அதிக ரன்களை குவிக்கப் போகிறார் என்று கூறினார் ஸ்ரீஷாந்த்.