தோனியின் பிறந்தநாள் முடிந்த பிறகு வீடியோ வெளியிட்ட ஸ்ரீசாந்த். ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் – காரணம் என்ன?
இந்திய ரசிகர்களால் அதிக விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மஹேந்திர சிங் தோனி. இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு காரணம் இவரின் தனித்தன்மைதான். அழுத்தமான சூழ்நிலையில் அமைதியாக இருந்து பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்திரு
இந்திய ரசிகர்களால் அதிக விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் மஹேந்திர சிங் தோனி. இவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்கு காரணம் இவரின் தனித்தன்மைதான். அழுத்தமான சூழ்நிலையில் அமைதியாக இருந்து பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். மேலும் இவரின் வித்தியாசமான விக்கெட் கீப்பிங் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்டெம்புகளை அடிப்பது என்பதற்கு அவருக்கு நிகர் அவரே.
அதுமட்டுமல்லாமல் தோனி 3 உலக கோப்பைகளையும் பெற்று தந்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி 5 கோப்பைகளையும் 14 போட்டிகளில் 12 முறை பிளே ஆஃப் சுற்றுக்கும் கொண்டு சென்றிருக்கிறார். இப்படி பல திறமைகளை கொண்ட தோனி கடந்த 7ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடினார். இவருக்கு பலர் வாழ்த்துகளும் சிலர் வாழ்த்துகளுடன் விமர்சனங்களையும் வைத்தனர்.
ஸ்ரீசாந்த் இன்ஸ்டா வீடியோ :
இதனிடையே தான் தோனி பற்றி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ஸ்ரீஷாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையேயான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் தோனி ஸ்ரீஷாந்த் போட்ட பந்தில் கிளீன் போல்ட் ஆகி ஆட்டமிழந்து வெளியேறுகிறார்.
ஆனால் எதற்காக ஸ்ரீசாந்த் இந்த விடியோவை தோனியின் பிறந்தநாள் முடிந்து 2 நாட்கள் கழித்து பதிவிட வேண்டும் என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது. சிலர் இதனை விளையாட்டாக வீடியோ போட்டிருக்கலாம் என்றும், சிலர் தோனியின் மீது உள்ள வன்மத்தினால் இப்படி செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும் இதோ போன்று கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார் ஸ்ரீசாந்த். ஆனால் உண்மை எது என்று ஸ்ரீசாந்திற்கு மட்டுமே தெரியும் நிலையில் இந்த வீடியோவானது சோவியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீசாந்த் ஐபிஎல் 2015 விளையாடி கொண்டிருக்கும் போது அதில் மேட்ச் பிக்சிங் குற்றம் சாட்டப்பட்டது. இது பெரிய பிரச்னையாக வெடித்தது. மேலும் இந்த பிரச்சனையால் ஸ்ரீசாந்திக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வேண்டும் அந்த தீர்ப்புக்கு விலக்கு அளிக்கப்பட்டு 7 ஆண்டுகள் என்று குறைக்கப்பட்டது. இதனையடுத்து தடை முடிந்து மீண்டும் கிரிக்கெட்டி விளையாட வந்த ஸ்ரீசாந்த் தற்போது வர்ணனையாளராக இருந்து வருகிறார்.
பொதுவாக தோனியின் பிறந்தநாள் என்றாலே சில சர்ச்சைகள் வருவதுண்டு ஏனென்றால் தோனியின் பிறந்தநாளுக்கு அடுத்து கங்குலி மற்றும் ஒருநாள் கழித்து சுனில் கவாஸ்கர் என்று இருக்கிறது. இதனால் யார் சிறந்த கேப்டன் என்ற சர்ச்சைகள் கூட வருவதுண்டு. அதோடு ரவிச்சந்திரன் அஸ்வின் கூட தோனியின் பிறந்தநாளில் தான் வாழ்த்து சொல்லவில்லை என்றால் ட்ரோல் செய்யயப்படுவேன் என்று கூறியது பேசிய சர்ச்சையாக மாறியது குறிப்பிடதக்கது