அவருக்கு 83 படத்தை போட்டு காட்டுங்கள்.. அப்போதுதான் புரியும் – பாக் இயக்குனருக்கு இந்திய முன்னாள் வீரர் பதிலடி.

உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர்.

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. அதே போல் இந்திய விளையாடாத போட்டிகளில் கூட்டம் குறைவாக வருவதையும் காணலாம். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று இருந்தது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இந்தியா சுலபமாக அந்த போட்டியில் வென்றது.

இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகம் மைதானத்தில் இருந்தனர். போட்டியின் இடையே இந்திய ரசிகர்கள் அனைவரும் வந்தே மாத்திரம் பாடியது மெய் சிலிர்க்க வைத்தது. இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் மிக்கி ஆர்தர் பிசிசிஐ மீதும் ரசிகர்கள் மீதும் சில கண்டங்களை வைத்தார்.

மேலும் அவர் கூறுகையில் “ஐசிசி நடத்திய போட்டியை போல் தெரியவில்லை என்பதே உண்மையாகும். மாறாக அது பிசிசிஐ நடத்திய இருதரப்பு தொடரை போல் இருந்தது அதே போல் பாகிஸ்தான்னுக்கு ஆதரவாக எந்த ஒரு கோஷமும் அங்கு கேட்க வில்லை. நான் இதை காரணமாக கூறவில்லை இந்திய அணி சிறப்பாக செயல் பட்டனர். என்று பாகிஸ்தான் மிக்கி ஆர்த்தர் கூறி இருந்தார். இதற்கு பலரும் பதில் கூறிய நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் ஸ்ரீசாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறுகையில் ” இந்தியா எங்கு விளையாடினாலும், ஐசிசி நிகழ்வு நடப்பதாகத் தெரியவில்லை. இது எப்போதும் பிசிசிஐ நிகழ்வாகவே தோன்றும். அவருக்கும் 83 திரைப்படத்தை வசனங்களுடன் காட்ட வேண்டும். அப்போது பிசிசிஐ எங்கே இருந்தது, இப்போது எங்கே இருக்கிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியும். பயணம் மிகவும் முக்கியமானது. இது ஒரு ஊக்கமளிக்கும் மற்றும் நம்பிக்கையூட்டும் கதை.

பிசிசிஐ தங்களுடைய சொந்த உழைப்பினால் மேலே உயர்ந்துள்ளது. தற்போது நிர்வாகிகளும் வீரர்களும் நன்றாக இருக்கிறார்கள். உலகக் கோப்பையில் நமது “சி” டீம் விளையாடினாலும் அது சிறப்பான அணியாக இருக்கும். உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடந்தால் மிக்கி ஆர்தர் இதையே சொல்லியிருப்பாரா? இரண்டு வருடங்கள் டர்பனில் விளையாடியபோதும், நான் இந்தியாவில் இருப்பதை போலத்தான் உணர்ந்தேன் என்று மேலும் கூறினார் முன்னாள் வீரர் ஸ்ரீஷாந்த.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை