நடராஜனின் பலமே இதுதான்.. இப்படியே இருந்தால் அது நடக்க வெகு தூரம் இல்லை – ஹைதராபாத் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின் பேச்சு.

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இந்த தொடருக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் டி20 மாயாஜாலமானது உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பலருக்கு இந

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது கோலாகலமாக நடந்து வரும் நிலையில் இந்த தொடருக்கு பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் டி20 மாயாஜாலமானது உலக கோப்பை டி20 தொடர் வடிவில் வர இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற உலக கோப்பைக்கு ஏற்கனவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பலருக்கு இந்த தேர்வு உலக கோப்பையை வெல்ல சரியாக இருக்கும் என்றும், சிலருக்கு இந்த தேர்வு சரியாக இருக்காது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பிடதக்க வகையில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஸ்பின்னர்களுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்த வகையில் இந்த முறையும் அதிக ஸ்பின்னர்கள் அணியில் இறுகின்றனர். இருந்த போதிலும் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை.

சொல்லப்போனால் இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் நடராஜன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த சீசனில் பர்பிள் கேப் போட்டியில் உள்ளார். இந்நிலையில் தான் நடராஜன் குறித்து போசியுளார் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்.

அவர் கூறியதாவது : இந்தியாவில் பல தரமான வீரர்கள் உள்ளனர். நடராஜன் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே அவரால் கட்டுப்படுத்த முடியும். அவரது பெரிய பலம் வெளிப்படையாக அவரது யார்க்கர் பந்துவீச்சு ஆகும். அங்குதான் அவர் ஒரு அணியாக எங்களுக்கு மிகப்பெரிய சொத்து.

அவர் செல்லும் வழியில் இதே போன்று சென்று கொண்டிருந்தால், இந்த ஐபிஎல் முழுவதுமே தனது ஃபார்மைத் தக்க வைத்துக் கொண்டால், தற்போது இந்தியாவைச் சுற்றி அவரை குறிப்பிடுவது போல பேசிக்கொண்டே செயல்ப்ட்டால் அவர்க்கு கண்டிப்பாக இந்திய அணியின் மீண்டும் இடம் கிடைக்க வெகு தொலைவு இல்லை என்றார் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின்.

டி நடராஜன் 2020-21ல் இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் 3 வடிவங்களிலும் அறிமுகமான இடது கை வேகப்பந்து வீச்சாளர். நடராஜன் கடைசியாக இந்தியாவுக்காக மார்ச் 2021 இல் இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் விளையாடினார். தற்போது ஐபிஎல் 2024 தொடரில் அற்புதமானா பந்துவீச்சளராக அசத்தி வருகிறார் நடராஜன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை