அடி மேல் அடி… விண்ணிற்கு செல்லும் பந்துகள்… CSK vs RCB சாதனையை உடைத்த SRH vs MI. அது என்ன சாதனை தெரியுமா??
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்தது. இந்தப் போட்டியானது ஹைதரா
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த ஐபிஎல் 2024 திருவிழா மார்ச் 22 முதல் நடைபெற்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்தது. இந்தப் போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி இண்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பம் முதலே சோதனையாக முடிவு வரை இருந்தது. 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்களை குவித்தது. இது ஐபிஎல் வரலாறு மிக அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முதலில் மயங்க அகர்வால் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும் மற்றொரு பக்கம் நின்று கொண்டிருந்த ட்ராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும் அடித்து இருந்தார்.
அதில் மூன்று சிக்சர்களும் ஒன்பது பவுண்டர்களும் அடித்திருந்தார். அதன் பின் வந்த அபிஷேக் ஷர்மா அவர் பங்கேற்க்கு அதிரடி ஆட்டத்தை இருந்தார். அவர் 23 பந்துகளில் 63 ரன்கள் அடித்து இருந்தார். அதில் 7 சிக்சர்களும் மூன்று பவுண்டர்களும் அடங்கும். அதன்பின் தான் மும்பை அணியின் வீரர்களுக்கு உண்மையான சோதனை காத்துக்கொண்டிருந்தது. அதன் பின் வந்து மார்க்கம் என்று கிளாசென் இணைந்து மும்பை அணியும் பந்துவீச்சை அனைத்து பக்கமும் அடித்து சிதற அடித்து இருந்தனர்.
மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் அடித்து இருந்தார். அதில் 2 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடித்து இருந்தனர். க்ளாசென் 34 பந்துகளில் 80 ரன்களை அவர் அடித்து இருந்தார்.அதில் 7 சிக்சர்களும் நான்கு பவுண்டரிகளும் அடங்கும். எனவே SRH அணி 278 ரன்களை இலக்காக் கொண்டுள்ளது. மும்பை அணியின் பந்துவீச்சு பற்றி சொல்ல வேண்டுமானால் மிகவும் மோசமானதாக இருந்தது. இதில் அறிமுக வீரர் மபாகா நான்கு ஓவர்களில் 66 ரன்களை அவர் விட்டுகொடுத்து இருந்தார்.
அதன் பின் பேட்டிங் செய்த மும்பை அணியும் அவர்களது அதிரடியை காட்ட தொடங்கினர். தற்போது மும்பை அணி 17.2 ஓவர்களில் 215 -4 என்ற நிலையில் விளையாடி வருகிறது. இதில் இந்த இரு அணிகளும் மற்றுமொரு சாதனை படைத்து இருந்தது. அது என்ன வென்றால் ஒரே போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த அணிகள் பட்டியலில் இந்த இரண்டு அணிகள் தான் முதல் இடத்தில் 34 சிக்சர்களுடன் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஒரே போட்டியில் அதிக ரன்கள்(501) அடித்த அணிகள் என்ற சாதனயையும் படைத்தது இந்த இரண்டு அணிகள்.
ஒரே போட்டியில் இரு அணிகள் அடித்த சிக்சர்கள் பட்டியல்
34* – SRH vs MI 2024
33 – RCB vs CSK 2018
33 – RR vs CSK 2020
33 – RCB vs CSK 2023
31 – DC vs GL 2017
31 – CSK vs KKR 2018
31 – PBKS vs KKR 2018