திலக் வர்மாவுக்கு உலக கோப்பையில் வாய்ப்பு கொடுக்காதீங்க – முன்னாள் கேப்டன் அதிர்ச்சி பேட்டி.
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல
அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2023 உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இதனிடைய இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் இன்னும் இந்திய அணிக்கு திரும்பாமல் இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதை விட இந்தியாவிற்கு சமீப காலத்தில் நம்பர் 4வது இடத்தில் யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில் தன ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலான மாற்று இடது கை பேட்ஸ்மேனாக திலக் வர்மா களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் கடந்த ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக விளையாடி தனனுடைய அடுத்த போட்டியை உறுதி செய்தார். இதனால் வரும் ஆசிய கோப்பை போட்டியில் திலக் வர்மாவின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு உலக கோப்பையிலும் விளையாட வாய்ப்பு கிடைக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் திலக் வர்மா உலக கோப்பையில் இணைத்து குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “திலக் வர்மா திறமையான வீரர் என்பதில் சந்தேகம் கிடையாது. எதிர்கால இந்திய அணியின் நட்சத்திர வீரராக வரக்கூடிய அளவிற்கு அவருக்கு திறமையும், தகுதியும் இருக்கிறது. ஆனால் அவரை இந்த உலக கோப்பையில் தேர்ந்தெடுப்பது என்பது சரியான முடிவாக இருக்காது என நினைக்கிறேன் என்றார் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். மேலும் பேசிய அவர் கூறுகையில் தன்னுடைய கருத்தை முன்னாள் இந்திய அணியின் கேப்டனாக இருந்த கங்குலியும் இதயே சொல்வதாகவும் கூறியிருக்கிறார்.
ஏனென்றால் திலக் வர்மா ஒரு இளம் வீரர், எனவே அவர்க்கு உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக சில போட்டியில் வாய்ப்பு கொடுத்து சோதிக்க வேண்டும். அவரை அப்படியே உலக கோப்பையில் களமிறங்க கூடாது என்று சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார் கங்குலி. அதே போலத்தான் தற்போது ஸ்ரீகாந்தும் இளம் வீரர் திலக் அவர் வர இருக்கும் உலக கோப்பையில் பங்குபெறுவது என்பது சரியான முடிவாக இருக்காது என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “திலக் வர்மாவை எதிர்காலத்தில் வரும் 2024 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் வரும் உலக கோப்பை போட்டிக்கு தயார் செய்ய வேண்டும் என்றும், அதற்குள் அவருக்கு கால அவகாசம் கொடுத்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அனுபவம் மிக்க சிறந்த வீரராக திலக் வர்மா வருவார் என்று கூறியுள்ளார் ஸ்ரீகாந்த். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த அயலர்ந்து அணிக்கு எதிரான போட்டியில் திலக் வர்மா 0, 1 என்ற ரன்களை எடுத்து அதிர்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.