விராட் கோலி சதம் அடித்ததில் என்ன தவறு இருக்கிறது – காட்டமாக பேசிய ஸ்ரீகாந்த்.

உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பை

By ·

உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது நேற்று பங்களாதேஷ் அணியை எதிகொண்டது.

இதில் இந்திய அணி அற்புதமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றிக்கு இந்தியா பந்துவீச்சாளர்கள் ஒரு காரணமாக இருந்தாலும் விராட் கோலி அடித்த அந்த சதம் மியாகவும் முக்கியமானது. மேலும் விராட் கோலி அந்த சதத்தின் மூலம் 70 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் அடித்துள்ளார். ஆனால் விராட் கோலி நேற்று சதம் அடித்ததற்கு சிலர் சோசியல் மீடியாவில் தனக்காக விராட் கோலி ஆடியதாக விமர்சனம் செய்தனர்.

ஏனென்றால் விராட் கோலி வந்த போது ஒருகட்டத்தில் அவர் சதம் அடிப்பதற்கும், வெற்றி பெறுவதற்கு ஒரே அளவு ரன்கள் மட்டும் தான் தேவைப்பட்டது. இதனால் அவர் சிங்கில் எடுக்காமல் ரன்களை எடுத்தார். ஆனால் உடனிருந்த கேஎல் ராகுல் தான் சொல்லிதான் விராட் கோலி அப்படி செய்ததாக கூறினார். இருந்த போதிலும் விமர்சனம் செய்பவர்கள் விமர்சித்து கொண்டே தான் இருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும். முன்னாள் தேர்வு குழு தலைவருமாகிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இது குறித்து பதிவு ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இட்டுள்ளார். அந்த பதிவில் “உங்களுக்கு என்னதான் ஆனது, விராட் கோலி செய்ததில் என்ன தவறு இருக்கிறது? இந்த கேள்வியை நான் கிரிக்கெட் தெரியாமல் இருக்கும் சிலரிடம் கேட்கிறேன்.

உலக கோப்பை போட்டியில் சதம் அடிப்பது என்பது சாதாரண ஒரு விஷயம் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். விராட் கோலி இந்த சதத்திற்கு தகுதியானவர், மேலும் பலவற்றிற்கும் தகுதியானவர்.கேஎல் ராகுல் போன்ற ஒரு அணி வீரர் அப்படி செய்தது பாராட்டுக்குரிய ஒரு விஷயம், மேலும் உங்களால் இந்தியா vs பங்களாதேஷ் போட்டியை ரசிக்கவும் முடியும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

இந்நிலையில் நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதம் அடித்த விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 48 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் இன்னும் ஒரு சதத்தை அடித்தார் என்றார் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை